| மண்மகள் இலம்பகம் |
1224 |
|
|
| 2164 |
துயிற்றியபல் கேள்வியினர் | |
தூற்றிக்கொளப் பட்டா | |
ரயிற்றுப்படை யார்கண்மத | |
யானைகத னறுப்பார். | |
|
|
(இ - ள்.) ஆண்மையினின் எயிற்றுப்படை இடிக்கும் புலி ஒப்பார் - தம் வீரத்தினால், எயிற்றுப்படையையுடைய முழங்கும் புலி போன்றவர் ; பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார் - பழகிய வில்லையும் வாளையும் பிறர் தம் பக்கலிலே கற்கும்படி வேலோடு கூட வல்லவர்; துயிற்றிய பல்கேள்வியினர் - தம்மிடத்தே தங்கிய பல நூற் கேள்வியை உடையவர்; தூற்றிக் கொளப்பட்டார் - தெரிந்து கொள்ளப்பட்டவர்; அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார் - வேலின் வலியாலே பகைவரின் மதயானைகளின் சினத்தை அறுப்பவர்;
|
|
(வி - ம்.) இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர். எயில் துப்பு அடை ஆண்மை - மதிலின் துப்பை அடையும் வீரம் எனினுமாம். எயிற்றப்படை - பல்லாகிய படைக்கலன். இடிக்கும் - முழங்கும். தூற்றுதல் - ஆராய்ந்து கொள்ளல். அயில் துப்பு அடை எனக் கண்ணழித்துக் கொள்க.
|
( 63 ) |
| 2165 |
காலனொடு சூழ்ந்தகடு நோய்களையு மொப்பா | |
ராலுங்கட றூர்த்தன்மலை யகழ்தலிவை வல்லார் | |
ஞாலமறி யாண்டொழிலர் நான்கிலக்க முள்ளார் | |
மேலுநும ராலுரிமை யுட்சிறப்புப் பெற்றார். | |
|
|
(இ - ள்.) காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார் - வருத்திக் கொல்வதிற் கூற்றுவனையும் அவனைச் சூழ்ந்த கொடிய நோய்களையும் போன்றவர்; ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார் - ஒலிக்குங் கடலைத் தூர்த்தலும் மலையைத் தோண்டுதலும் ஆகிய இவற்றிலே வல்லவர்; ஞாலம் அறி ஆண்தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார் - உலகறிந்த வீரச் செயலினர் இவர்கள் நான்கு நூறாயிரம் எண்ணிக்கையினர்; மேலும் நுமரால் உரிமையுள் சிறப்புப் பெற்றார் - மற்றும், உம்மவரால் உரிமை பெற்ற சிறப்புடையார்.
|
|
(வி - ம்.) இவர்கள் காலாட்படையினர்.
|
|
காலன் ஏவின இடத்தே சேர்ந்து அவன் கருதிய செயலை முடித்துக் கொடுத்தலின் நோய்கள் காலனுக்குப் படையாயின. ஆகவே அந்நோய்கள் இம்மறவர்க்கு உவமையாயின. ஆலுங்கடல் - முழங்குங் கடல். ”மலையகழ்க்குவனே கடல் தூர்க்குவனே” (பட்டினப்பாலை) என்றார் பிறரும்.
|
( 64 ) |