| மண்மகள் இலம்பகம் |
1229 |
|
|
|
உலகை ஆள இங்கு வீற்றிருக்கின்றேன் என்று களித்து; புனை பூணான் - அணிபுனைந்த அவன், வென்றி வேழம் இருநூறும் - வெற்றிக் களிறுகள் இருநூறும்; காற்றின் பரிக்கும் தேர் நூறும் - காற்றென விரையும் தேர்கள் நூறும் ; கடுங்காவல் இவுளி ஆயிரமும் - விரையுங் கால்களையுடைய குதிரைகள் ஆயிரமும்; புனை செம் பொன் படையே அணிந்து - அழகிய பொற்படைகளாலே புனைவித்து ; போற்றி விடுத்தான் - தன்னைப் புகழ்ந்து விடுத்தான்.
|
|
(வி - ம்.) கோவிந்தனையுங் கொல்லக் கருதியதனால் இங்கு வீற்றிருந்தேன் என்று மகிழ்ந்தான். கூற்றம்: சீவகன், தன்நினைவுமுற்றியதென்று தன்னைப் போற்றினான்.
|
|
கொழும்பொன் உலகு ஆள்வாள் என்பதைக் கட்டியங்காரனுக்குப் பெயராக்கிப், 'பட்டுப் போய்ப் பொன்னுலகு ஆள்வதற்குரியான்' என்றும் பொருள் கூறலாம்
|
( 73 ) |
| 2175 |
மன்ன னாங்கோர் மதவேழம் | |
வாரி மணாள னென்பதூஉ | |
மின்னங் கொடித்தோ் விசயமும் | |
புரவி பவன வேகமும் | |
பொன்னிற புனைந்து தான்போக்க | |
நிகழ்வ தோரான் மகிழ்வெய்தி | |
முன்யான் விட்ட வினக்களிற்றி | |
னிரட்டி விடுத்தா னெனப்புகழ்ந்தான். | |
|
|
(இ - ள்.) மன்னன் - கோவிந்தன்; ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம் - வேழங்களில் ஒரு மத யானை வாரி மணாளன் என்பதையும்; மின்னும் கொடித்தேர் விசயமும் - ஒளிரும் கொடிபறக்கும் விசயம் என்னும் பெயரையுடைய தேரையும்; புரவி பவன வேகமும் - பவன வேகம் என்னும் குதிரையையும்; பொன்னின் புனைந்து - பொன்னால் அணிந்து; தான் போக்க - இவன் விடுத்தவுடன்; நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி - நிகழ்வதை அறியாத கட்டியங்காரன் மகிழ்வடைந்து; முன் யான் விட்ட - இனக் களிற்றின் இரட்டி விடுத்தான் எனப் புகழ்ந்தான் - முன்னர் யான் போக விடுத்த களிறு முதலியவற்றின் இரட்டித்த சிறப்புடையவற்றை வரவிட்டான் என்று புகழ்ந்தான்.
|
|
(வி - ம்.) நின் பெரும்படை என் சிறுபடைக்கு நிகர்க்கும் என்பது தோன்ற வரவிட்டான் என்று உணராமையின், 'நிகழ்வதோரான்' என்றார்.
|
( 74 ) |