| நாமகள் இலம்பகம் |
123 |
|
|
மேலும்; முத்தமாலை யெனின், மேல், 'நறுமாலை' (சீவக. 225), 'எண் கோதைத் தொகை' (சீவக. 2607) என்றல் பொருந்தாது. வளர்ந்ததை : வினைத்திரி சொல்; 'உரைத்ததை' (கலி. 76) போல.
|
|
|
மேலே, 'துளும்பு நல்லதாரோடு' (சீவக. 2889) என்றலின், முத்தணி மாலையைக் கனவிற் கண்டாள்; அது காரணம். இதனாற் சுற்றங் கெட்டபடியும் அரசன் கெட்டபடியுங் கூறினார். அது கதையிற் காண்க.
|
( 194 ) |
| 224 |
வார்குழை வில்லிட மாமுடி தூக்குபு |
| |
கார்கெழு குன்றனை யான்கன வின்னியல் |
| |
பார்கெழு நூல்விதி யாற்பயன் றான்தெரிந் |
| |
தோ்குழை யாம லெடுத்துரைக் கின்றான். |
|
|
(இ - ள்.) கார்கெழு குன்றனையான் - முகில் தவழும் மலை போலச் சலிப்பில்லாத சச்சந்தன்; கனவின் இயல் பார்கெழு நூல் விதியால்தான் பயன் தெரிந்து - கனவின் தன்மையை உலகிற் பொருந்திய கனாநூலின் விதியாலே தான் பயனைத் தெரிந்து; வார்குழை வில்இட மாமுடி தூக்குபு - நீண்ட குழை ஒளிவிட முடியை அசைத்து; ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான் - (அவற்றில் நல்லவற்றை எடுத்து) அவள் அழகு கெடாமற் கூறுகின்றான்.
|
|
|
(வி - ம்.) அஃது அசோகு முறிந்தது கூறாமல் மாலையையும் முடியையும் இரண்டு கனவாகப் பிரித்தது.
|
( 195 ) |
| 225 |
நன்முடி நின்மக னாநறு மாலைக |
| |
ளன்னவ னாலம ரப்படுந் தேடிவியர் |
| |
நன்முளை நின்மக னாக்கம தாமெனப் |
| |
பின்னத னாற்பயன் பேசலன் விட்டான். |
|
|
(இ - ள்.) நன்முடி நின்மகன் ஆம் - அழகிய முடி உன் மகனாகும்; நறுமாலைகள் அன்னவனால் அமரப்படும் தேவியர் - மணமிகு மாலைகள் அவனால் விரும்பப்படும் தேவியர்; நன்முளை நின்மகன் ஆக்கமது ஆம்என - அழகிய முளை நின்மகனின் மேம்பாடு ஆகும் என; மூன்றாக்கிக் கூறிய பிறகு, பின்னதனாற் பயன் பேசலன் விட்டான் - இற்றதனால் உள்ள பயனைக் கூறாமல் விட்டான்.
|
|
|
(வி - ம்.) 'குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம்' (சீவக. 2182) (அத்தினபுரம்) போல், முத்த மாலையை மாலையென்னும் பெயர் கருதி நறுமாலை என்றல் ஆகாமை யுணர்க; மாலையென்னும் பெயர் பொதுவாகலின்.
|
( 196 ) |