| மண்மகள் இலம்பகம் |
1232 |
|
|
|
ஒப்பற்ற அவ்வில்லைத் தொட நாள் கூறுமின் என்பாரும்; பல்சரம் வழங்குவாரும் - பல அம்புகளை விடுப்பாரும்; பரிவு கொள்பவரும் ஆனார் - இவற்றை அறியால் வருந்துவாரும் ஆயினார்.
|
|
(வி - ம்.) 'வனப்பு வாங்க - அழகு இழுக்க' என்றும் கூறலாம்.
|
|
நல்லவள் - ஈண்டிலக்கணை. வனப்பு - அழகு. நகை - ஒளி. உவனித்தல் குறிபார்த்து எய்தல். நாட்சொல்லுமின் என்று கணிகளைக் கேட்பாரும் என்பது கருத்து.
|
( 78 ) |
| 2180 |
பிறையெயிற் றெரிகட் பேழ்வாய்ப் | |
பெருமயிர்ப் பைம்பொற் பன்றி | |
யறையெனத் திரியு மாய்பொற் | |
பூமியி னிறைந்து மன்ன | |
ருறுகணை யொன்றும் வில்லு | |
முடன்பிடித் துருவ நேமிப் | |
பொறிதிரி வதனை நோக்கிப் | |
பூமுடி துளக்கி நின்றார். | |
|
|
(இ - ள்.) பிறை எயிற்று - பிறை மதியனைய பற்களையும்; எரிகண் - எரியும் கண்ணையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்; பெரு மயிர் - பெரிய மயிரையும் உடைய; பைம் பொன் பன்றி - பொன்னாலாகிய பன்றி; அறை எனத் திரியும் ஆய் பொன் பூமியின் - என்னைக் கொல் என்று கூறித் திரியும் அந்தப் பொன்னிலத்தே; மன்னர் நிறைந்து - அரசர்கள் நிறைந்து; உறுகணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து - உற்ற அம்பு ஒன்றையும் வில்லையும் சேரப்பற்றி; உருவ நேமிப் பொறி திரிவதனை நோக்கி - அழகிய ஆழியினுள்ளே பன்றி திரிவதைப் பார்த்து; பூ முடி துளக்கி நின்றார் - அழகிய முடியை அசைத்து நின்றனர்.
|
|
(வி - ம்.) பிறை - திரிபன்றியின் எயிற்றிற்குவமை. எரிகண் : வினைத்தொகை. பேழ் - பெரிய. அறை - அறைதல். அடித்தல் - கொல்லுதல். அதன் அருமை நோக்கி முடிதுளக்கினர் என்க. அறை, 'பத்திராபனம்' என்பர் நச்சினார்க்கினியர்; அஃதாவது, தனது ஆக்கத்தை விளம்புதல்.
|
( 79 ) |
| 2181 |
ஏந்தெழி லாகஞ் சாந்தி னிடுகொடி யெழுதிக் காதிற் | |
காய்ந்தெரி செம்போற் றோடுங் கனமணிக் குழையு மின்ன | |
வேந்தருள் வினிதை வேந்தன் வெஞ்சிலை தளர வாங்கி | |
யாய்ந்தபொற் பன்றி நெற்றி யருந்துக ளார்ப்ப வெய்தான். | |
|
|
(இ - ள்.) வேந்தருள் வினிதை வேந்தன் - அவ்வரசரில் வினிதையின் அரசன்; ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடுகொடி
|