பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1235 

2185 ஊடிய மடந்தை போல
  வுறுசிலை வாங்க வாரா
தாடெழு வனைய திண்டோ
  ளவந்திய னதனை நோனா
னாடெழுந் தார்ப்ப மற்றந்
  நன்சிலை முறித்திட் டம்பை
வாடினன் பிடித்து நின்றான்
  மண்மகன் போல நின்றான்.

   (இ - ள்.) ஆடி எழுஅனைய திண்தோள் அவந்தியன் - வெற்றியுடைய கணையமரம்போன்ற திண்ணிய தோளையுடைய அவந்தி மன்னன்; உறுசிலை ஊடிய மடந்தைபோல வாங்க வாராது - தன்சிலை ஊடிய மங்கைபோல வளைக்க வளையாததனால்; அதனை நோனான் - அதனைப் பொறானாகி; நாடு எழுந்து ஆர்ப்ப - நாடு ஆரவாரிக்க; அந் நன்சிலை முறித்திட்டு - அந்த அழகிய வில்லை முறித்து; அம்பை பிடித்து வாடினன் நின்றான் - அம்பைக் கையிலேந்திச் சோர்வுற்று நின்றவன்; மணமகன் போல நின்றான் மணமகனைப் போல் காணப்பட்டான்.

   (வி - ம்.) வாடினன் : முற்றெச்சம். பிடித்து நின்றான் - நின்றான் : வினையாலணையும் பெயர். பின்னது வினைமுற்று. நோனான் : முற்றெச்சம்.

( 84 )
2186 பில்கித்தே னொழுகுங் கோதைப்
  பிறர்மனை யாள்கட் சென்ற
வுள்ளத்தை யுணர்வின் மிக்கா
  னொழித்திடப் பெயர்ந்த தேபோன்
மல்லனீர் மகத ராசன்
  றுரந்தகோன் மருள வோடிப்
புல்லியப் பொறியை மோந்து
  புறக்கொடுத் திட்ட தன்றே.

   (இ - ள்.) தேன் பில்கி ஒழுகும் கோதைப் பிற மனையாள் கண் சென்ற - தேன் துளித்து வடியும் மாலையணிந்த பிறன் மனையாளிடம் போன; உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திடப் பெயர்ந்ததேபோல் - மனத்தை அறிவிற் சிறந்தவன் மீட்க அது மீண்டாற்போல; மல்லல் நீர் மகதராசன் துரந்த கோல் - வளமிகுந்த நீர் செறிந்த மகத நாட்டு மன்னன் விட்ட அம்பு; மருள ஓடி அப் பொறியைப் புல்லி மோந்து - கண்டோர்