| மண்மகள் இலம்பகம் |
1236 |
|
|
|
இது படுமென்று மயங்கும்படி ஓடி அப் பொறியைப் பொருந்தித் தீண்டி; புறக் கொடுத்திட்டது - மீண்டு போயிற்று.
|
|
(வி - ம்.) தேன்பில்கி யொழுகும் என மாறுக. உணர்வின் மிக்கான் - அறிவு மிக்கவன். மல்லல் - வளம். மகதம் - ஒருநாடு. கோல் - கண்டோர் மருள என்க. பொறி - திரிபன்றி.
|
( 85 ) |
| 2187 |
தென்வரை பொதியி லார | |
மகிலொடு தேய்த்த தேய்வை | |
மன்வரை யகலத் தப்பி | |
மணிவடந் திருவில் வீச | |
மின்னென் விட்ட கோலை | |
விழுங்கக்கண் டழுங்கி வோ்த்துக் | |
கன்மலிந் திலங்கு திண்டோட் | |
கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான். | |
|
|
(இ - ள்.) கல் மலிந்து இலங்கு திண்தோள் - கல்லெனத் திண்மை மிகுந்து விளங்குந் திண்ணிய தோளையுடைய; கலிங்கர் கோன் - கலிங்க மன்னன்; தென்வரைப் பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை - தென் மலையாகிய பொதியத்தின் சந்தனத்தையும் அகிலையும் தேய்த்த குழம்பை; மன்வரை அகலத்து அப்பி - பொருந்திய மலைபோன்ற மார்பிலே அப்பி; மணிவடம் திருவில் வீச - மணியாலான வடம் வானவில்லென ஒளிவிட; மின் என விட்ட கோலை விழுங்கக் கண்டு - மின் போல எய்த அம்பைப் பொறி விழுங்கலைப் பார்த்து; அழுங்கி வேர்த்து மெலிந்து மீண்டான் - வருந்தி வியர்த்துச் சோர்ந்து திரும்பினான்.
|
|
(வி - ம்.) தென்வரையாகிய பொதியில் என்க. ஆரம் - சந்தனம். தேய்வை - குழம்பு. கலிங்கர்கோன் தான் விட்ட கோலை விழுங்கக் கண்டு அழுங்கி வேர்த்து மெலிந்து மீண்டான் என்க. கலிங்கம் - ஒரு நாடு.
|
( 86 ) |
| 2188 |
கன்மழைப் பொற்குன் | |
றேந்திக் கணநிரை யன்றுகாத்து | |
மன்னுயி ரின்று காக்கும் | |
வாரண வாசி மன்னன் | |
மின்னிழை சுடர வாங்கி | |
விட்டகோ லுற்று றாதாய் | |
மன்னுயிர் நடுங்க நாணி | |
மண்புக்கு மறைந்த தன்றே. | |
|