| மண்மகள் இலம்பகம் |
1237 |
|
|
|
(இ - ள்.) அன்று கன்மழைப் பொன் குன்று ஏந்திக் கணநிரை காத்து-முற்காலத்தில் கல்மழையைத் தடுக்க அழகிய மலையைக் குடையாக ஏந்தி ஆனிரையைக் காப்பாற்றி; இன்று மன் உயிர்காக்கும்-இக்காலத்தில் உயிர்க் காவல் செய்கின்ற; வாரணவாசி மன்னன் - காசி வேந்தன்; மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் - ஒளிரும் அணிகள் விளங்க வில்லை வளைத்து விட்ட அம்பு; உற்று உறாதாய் - சிறிது பொருந்திப் பெரிதும் பொருந்தாததாய்; நாணி - நாணுற்று; மன்உயிர் நடுங்க - (தம்மேல் விழுமோ என்று) உயிர்கள் நடுங்குமாறு; மண் புக்கு மறைந்தது - மண்ணிற் புகுந்து மறைந்தது.
|
|
(வி - ம்.) இதுவாரணவாசி மன்னனை திருமாலொடு ஒப்பித்தது. உற்றுறாதாய் - பட்டும் படாததாய். உடையான் நாணத்தை உடைமை மேல் ஏற்றிக் கூறினர்.
|
( 87 ) |
| 2189 |
எரிகதிர்ப் பைம்பொற் சுண்ண | |
மிலங்கமெய்ம் முழுது மப்பிப் | |
புரிகழ லணிந்த நோன்றாட் | |
போதன புரத்து வேந்த | |
னரிதினிற் றிகிரி யேறித் | |
திரிந்துகண் சுழன்று சோர்ந்து | |
விரிகதிர்க் கடவுள் போல | |
வெறுநிலத் தொலிப்ப வீழ்ந்தான். | |
|
|
(இ - ள்.) எரிகதிர்ப் பைம்பொன் சுண்ணம் மெய்ம்முழுதும் இலங்க அப்பி - விளங்கும் ஒளியையுடைய பொற்சுண்ணத்தை உடம்பு முழுதும் விளங்கப் பூசி; புரிகழல் அணிந்த நோன்தான் - கழலைக் கட்டிய வலிய கால்களையுடைய; போதன புரத்து வேந்தன் - போதன நகர மன்னன்; அரிதினில் திகிரி ஏறி - அரிதின் முயன்று ஆழிமீது ஏறி; திரிந்து கண் சுழன்று சோர்ந்து - அது திரிதலின் கண் சுழன்று சோர்வுற்று; விரிகதிர்க் கடவுள்போல - ஞாயிறுபோல; வெறுநிலத்து ஒலிப்ப வீழ்ந்தான் - வெறு நிலத்திலே பலரும் ஆரவாரிக்க வீழ்ந்தான்.
|
|
(வி - ம்.) அப்பி - பூசி. புரிகழல் - கட்டிய கழல். நோன்றாள் - வலிய கால். திகிரி - ஆண்டுச் சுழலும் சக்கரம். திரிந்து - திரிதலான். கதிர்க்கடவுள் - ஞாயிறு.
|
( 88 ) |
| 2190 |
மலையச்செஞ் சாந்து முந்நீர் | |
வலம்புரி யீன்ற முத்து | |
மிலைவைத்த கோதை நல்லா | |
ரிளமுலைப் பொறியு மார்ந்து | |
|