பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1238 

2190 சிலைவைத்த மார்பிற் றென்னன்
  றிருமணிப் பன்றி நோக்கித்
தலைவைத்த தம்பு தானுந்
  தரணிமேற் பாதம் வைத்தான்.

   (இ - ள்.) மலையச் செஞ்சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும் - பொதியில் செஞ்சாந்தும், கடலில் வலம்புரிச் சங்கு தந்த முத்தும்; இலை வைத்த கோதை நல்லார் இளமுலைப் பொறியும் ஆர்ந்து - இலையிடையிட்ட மலர் மாலையணிந்த மங்கையரின் இளமுலைச் சுவடும் நிறைந்து; சிலை வைத்த மார்பின் தென்னன் - மலையை உவமையாக வைத்த மார்பினையுடைய பாண்டியன்; திருமணிப் பன்றி நோக்கி - அழகிய மணிகள் இழைத்த பன்றியைப் பார்த்துச் சென்று; அம்பு தலைவைத்தது - அம்பு பட்டது; தானும் தரணிமேல் பாதம் வைத்தான் - அவனும் (ஆழியின் மேல் நிற்றலாற்றாமல்) நிலமிசை அடியை ஊன்றினான்.

   (வி - ம்.) பாண்டி நாட்டிற் சிறந்த மைலையச்சாந்தமும் முத்தும் கூறியவாறு காண்க.

( 89 )
2191 விற்றிறல் விசய னென்பான்
  வெங்கணை செவிட்டி நோக்கி
யொற்றுபு திருத்திக் கைம்மே
  லுருட்டுபு நேமி சோ்ந்தாங்
குற்றதன் சிலையின் வாய்ப்பெய்
  துடுவமை பகழி வாங்க
விற்றுவின் முறிந்து போயிற்
  றிமைப்பினி னிலங்கித் திட்டான்.

   (இ - ள்.) வில்திறல் விசயன் என்பான் - வில்லேந்திய திறலையுடைய விசயன் எனப்படுவோன்; வெம்கணை செவிட்டி நோக்கி - தன் கொடிய அம்பை ஒருக்கடித்து நோக்கி; கைமேல் ஒற்றுபு திருத்தி உருட்டுபு - இடக்கையின்மேல் அமுக்கித் திருத்தி உருட்டியவாறு; நேமி சேர்ந்து - ஆழியின்மேலே குதித்து ; உற்ற தன் சிலையின் வாய்ப்பெய்து - பொருந்திய தன் வில்லினிடத்தே சேர்த்து; உடு அமை பகழி வாங்க - சிறகமைந்த அப்பகழியை இழுத்தானாக; வில் இற்று முறிந்து போயிற்று - வில் இரண்டாக ஒடிந்து போயிற்று; இமைப்பினில் இலங்கித் திட்டான் - நொடியளவிலே குதித்திட்டான்.

   (வி - ம்.) வில்வித்தையில் ஆற்றல் மிக்க விசயன் என்க. செவிட்டி நோக்கி - ஒருக்கடித்துப் பார்த்து. ஒருக்கணித்து என்பர் இக்காலத்தார்