பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1239 

   உருட்டுபு-உருட்டி. நேமி - சக்கரப்பொறி. உடு - சிறகு. இலங்கித்தல் - குதித்தல். (லங்கநம் - குதித்துப் பாய்தல்.)

( 90 )
2192 குண்டல மிலங்க வாங்கிக்
  குனிசிலை யுறையி னீக்கிக்
கொண்டவன் கொழும்பொற் றாரு
  மாரமு மிளிர வேறிக்
கண்டுகோ னிறைய வாங்கிக்
  காதுற மறித லோடும்
விண்டுநா ணற்ற தாங்கே
  விசயனும் வீக்க மற்றான்.

   (இ - ள்.) அவன் குண்டலம் இலங்க குனிசிலை வாங்கி - அவன் குண்டலம் விளங்கும்படி சேமவில்லை வாங்கி; உறையின் நீக்கிக் கொண்டு - உறையினின்றும் நீக்கி எடுத்துக் கொண்டு; கொழும்பொன் தாரும் ஆரமும் மிளிர - வளவிய பொன் மாலையும் முத்துமாலையும் பிறழ; ஏறி - ஆழியின்மீது ஏறி; கண்டு - பன்றி மூன்றுங் கூடுங் காலத்தைக் கண்டு; கோல் நிறைய வாங்கி - அம்பினை நன்றாக இழுத்தலாலே; காது உற மறிதலோடும் - அது காதிலே செல்ல மறிகின்ற அளவிலே; நாண் விண்டு அற்றது - நாண் முறுக்கு நீங்கி அறுந்தது; விசயனும் வீக்கம் அற்றான் - அவ்வளவிலே எய்யும் கருத்தைக் கைவிட்ட விசயனும் தன் பெருமையிழந்தான்.

   (வி - ம்.) 'விட்டு' என்பது 'விண்டு' என விகாரமுற்றது. சீவகனிடத்தே கற்றலின், எய்தற்குரியனாகிய இவற்கு ஊழ் தடையாயிற்று.

( 91 )
2193 உளைவனப் பிருந்த மான்றே
  ரோளிமுடி மன்ன ரெல்லாம்
வலைவனப் பிருந்த தோளாள்
  வருமுலைப் போகம் வேண்டி
விளைதவப் பெருமை யோரார்
  விற்றிறன் மயங்கி யாருங்
களைகலார் பொறியை யாங்கோ
  ராறுநாள் கழிந்த வன்றே.

   (இ - ள்.) உளை வனப்பு இருந்த மான்தேர் ஒளிமுடி மன்னர் எல்லாம் - உளையின் அழகு தங்கிய புரவி பூட்டிய தேரையுடைய முடிமன்னர்கள் யாவரும்; வளைவனப்பு இருந்த தோளாள் வருமுலைப் போகம் வேண்டி - வேயின் அழகு தங்கிய தோளையுடைய இலக்கணையின் வளரும் முலையின்பத்தை