பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 124 

226 இற்றத னாற்பய னென்னென வேந்திழை
யுற்றதின் னேயிடை பூறெனக் கென்றலு
மற்றுரை யாடல ளாய்மணி மாநிலத்
துற்றதொர் கோதையிற் பொற்றொடி சோர்ந்தாள்.

   (இ - ள்.) இற்றதனால் பயன் என்என - பிண்டி இற்று வீழ்ந்ததனாற் பயன்என் என்று விசயை வினவ; ஏந்திழை இன்னே எனக்கு இடையூறு உற்றது என்றலும் - ஏந்திழையே! இங்ஙனே எனக்கு ஓர் இடையூறு நேர்ந்தது என்றுரைத்ததும்; பொற்றொடி மற்று உரையாடலளாய் - பொன்னாலான தொடியுடையாள் வேறு ஒன்றும் மொழியாதவளாய்; மணி மாநிலத்து அற்றது ஓர் கோதையிற் சோர்ந்தாள் - மணிநிலத்தே அற்று வீழ்ந்ததொரு கோதைபோல வீழ்ந்தாள்.

 

   (வி - ம்.) உற்றதென இறந்த காலத்தாற் கூறினான், தெளிவு பற்றி; 'இல்லை, கனா முந்துறாத வினை' (பழ..2) என்றலின். இன்னே, உதாசீனம் போல (விருப்பு வெறுப்பின்றிக் கூறியதுபோல) நின்றது.

( 197 )
227 காவி கடந்தகண் ணீரொடு காரிகை
யாவி நடந்தது போன்றணி மாழ்கப்
பாவியெ னாவி வருத்துதி யோவெனத்
தேவியை யாண்டகை சென்றுமெய் சார்ந்தான்.

   (இ - ள்.) காரிகை காவி நடந்த கண்ணீரொடு - விசயை காவியனைய கண்ணீருடனே; ஆவி நடந்ததுபோன்று அணி மாழ்க - உயிர் நீக்கினாற்போல அழகு கெடுதலாலே; ஆண்டகை சென்று - ஆடவரிற் சிறந்தவன் சென்று; பாவி என் ஆவி வருத்துதியோ எனத் தேவி மெய்யைச் சார்ந்தான் . பாவியேனுடைய ஆவியை வருத்துகின்றனையோ என்று கூறி அவளை மெய்யைத் தழுவினான்.

 

   (வி - ம்.) தேவியை மெய்யை என இரண்டிடத்தும் ஐயுருபு வருதல் (தொல் - வேற்றுமை மயங்- 5) 'தௌ்ளிது ' என்றதனான் முடியும்.

( 198 )
228 தண்மலர் மார்புறத் தழீஇயி னானவள்
கண்மலர்த் தாள்கன வின்னியல் மெய்யெனும்
பெண்மய மோபெரி தேமட வாய்க்கெனப்
பண்ணுரை யாற்பர வித்துயர் தீர்த்தான்.

   (இ - ள்.) தண்மலர் மார்பு உறவே தழீஇயினான் - குளிர்ந்த அகன்ற மார்பிலே பொருந்தத் தழுவினான்; அவள் கண் மலர்ந்