| மண்மகள் இலம்பகம் |
1240 |
|
|
|
விரும்பி; விளைதவப் பெருமை ஓரார் - விளையும் தவப் பெருமை தமக்கில்லையென அறியாராய்; யாரும் வில்திறல் மயங்கி - எல்லோரும் வில் வலிமை முதலியன கலங்குதலின்; பொறியைக் களைகலார் - பொறியைக் களையாராக; ஆங்கு ஒர் ஆறுநாள் கழிந்த - ஆங்கே ஆறு நாட்கள் கழிவுற்றன.
|
|
(வி - ம்.) உளைவனப்பு - பிடரிமயிரின் அழகு. வருமுலை : வினைத்தொகை. போகம் - நுகர்ச்சி. நன்மை விளைதற்குக் காரணமான தவத்தின் பெருமை என்க. மயங்கி - மயங்க.
|
( 92 ) |
வேறு
|
| 2194 |
பனைக்கை யானை மன்னர் | |
பணியப் பைம்பொன் முடியிற் | |
கனைக்குஞ் சுரும்பார் மாலை | |
கமழ மதுவுந் தேனு | |
நனைக்குங் கழலோன் சிறுவ | |
னாம வெள்வேல் வலவ | |
னினைக்க லாகா வகையா | |
னேரா ருயிர்மே லெழுந்தான். | |
|
|
(இ - ள்.) பனைக்கை யானை மன்னர் பணிய - பனைபோலுந் துதிக்கையையுடைய யானையையுடைய வேந்தர்கள் வணங்குதலால்; பைம்பொன் முடியில் கனைக்கும் சுரும்பும் தேனும் ஆர்மாலை கமழ - அம் மன்னரின் பொன் முடியிலே முரலும் சுரும்புகளும் தேனும் நிறைந்த மலர் மாலைகள் மணங்கமழ; மது நனைக்குங் கழலோன் சிறுவன் - தேன் நனைக்குங் கழலையுடையோன் ஆகிய சச்சந்தனின் மகன்; நாம வெள்வேல் வலவன் - அச்சுறுத்தும் வெள்ளிய வேலேந்திய வென்றியன்; நினைக்கல் ஆகா வகையால் நேரார் உயிர்மேல் எழுந்தான் - அவர் நினைக்க ஒண்ணாத வஞ்சனையாலே பகைவர் உயிரைக் கொள்ள எழுந்தான்.
|
|
(வி - ம்.) 'மதுவும்' என்பதிலுள்ள உம்மையைச், 'சுரும்பும்' என அதனுடன் சேர்க்க. 'மதுவுந் தேனும், என்னுந் தொடரில், 'தேனும்' என்ற சொல்லை மாற்றிச், 'சுரும்பும் தேனும்' என இயைக்க.
|
( 93 ) |
| 2195 |
காரின் முழங்குங் களிறுங் | |
கடலின் முழங்குந் தேரும் | |
போரின் முழங்கும் புரவிக் | |
கடலும் புகைவாட் கடலுஞ் | |
|