பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1241 

2195 சீரின் முழங்கு முரசு
  மலறுஞ் சிறுவெண் சங்கு
நீரின் முழங்க முழங்கு
  நீல யானை யிவர்ந்தான்.

   (இ - ள்.) காரின் முழங்கும் களிறும் - முகிலெனப் பிளிறும் யானையும்; கடலின் முழங்கும் தேரும் - கடல்போல் ஆரவாரிக்கும் தேரும்; போரின் முழங்கும் புரவிக் கடலும் - போரென முழங்கும் குதிரைக் கடலும்; புகை வாள் கடலும் - சினவும் வாளேந்திய காலாட்படைக் கடலும்; சீரின் முழங்கும் முரசும் - சிறப்புடன் முழங்கும் முரசும்; அலறும் சிறு வெண்சங்கும் - ஒலிக்கும் சிறிய வெண் சங்கும்; நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான் - நீர்மையுடன் முழங்க, அவன் பிளிறும் கரிய யானையின் மீது ஏறினான்.

   (வி - ம்.) முன்னின்ற இரண்டு 'இன்'னும் உவமப் பொருபோரின் : இன் : ஏது ; சீரின் - சீருடன்

( 94 )
2196 கல்லார் மணிப்பூண் மார்பிற்
  காம னிவனே யென்ன
வில்லார் கடலந் தானை
  வேந்தர் குழாத்துட் டோன்றப்
புல்லான் கண்ணி னோக்கிப்
  புலிகாண் கலையிற் புலம்பி
யொல்லா னொல்லா னாகி
  யுயிர்போ யிருந்தான் மாதோ.

   (இ - ள்.) கல்ஆர் மணிப்பூண் மார்பின் காமன் இவனே என்ன - கல்லிழைத்த மணியணிகள் புனைந்த மார்பையுடைய காமன் இவனே என்றுகூற; வில்ஆர் கடல் அம்தானை வேந்தர் குழாத்துள் தோன்றி - வில்லேந்திய கடலைப் போன்ற படையையுடைய வேந்தரின் குழுவிலே தோன்றியவுடன்; புல்லான் கண்ணின் நோக்கி - பகைவனான கட்டியங்காரன் பார்த்து; புலிகாண் கலையின் புலம்பி - புலியைக் கண்ட கலைபோலப் புலம்பி; ஒல்லான் ஒல்லான் ஆகி - தான் நிற்கும் முறையை அறியாத அவன் நிலைகெட்டவனாகி; உயிர்போய் இருந்தான் - உயிரிழந்தவன் போலானான்.

   (வி - ம்.) கல் - மணி. மணிப்பூண் என்பது பெயர்மாத்திரை, புல்லான் - பகைவன். கலை - மான். ஒல்லான் இரண்டனுள் முன்னையது முறையிலே பொருந்தாதவன், ஏனையது நெஞ்சம் பொருந்தாதவன் என்க. உயிர்போனவன் போன்றிருந்தான் என்க.

( 95 )