பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1242 

2197 புலியாய் புறுத்திக் கொண்டேன்
  போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரடோண் மதனன்
  னவனைப் பிழைத்த பிழைப்பு
கலியு மென்னை நலியு
  மென்னக் களிற்றி னுச்சி
யிலையார் கடகத் தடக்கை
  புடைத்து மெய்சோர்ந் திருந்தான்.

   (இ - ள்.) புலி யாப்புறுத்திக் கொண்டேன் போக்கிவிட்ட பிழைப்பும் - புலியைக் கைப்பற்றிய யான் அதனை வாலுருவிப் போகவிட்ட தவறும்; வலியார் திரள்தோள் மதனன் அவனைப் பிழைத்த பிழைப்பும் - ஆற்றல் சான்ற திரண்ட தோளையுடைய மதனன் சீவகனை விட்டுவிட்ட தவறும்; என்னை நலியும் நலியும் என்ன - என்னை வருத்தும் வருத்தும் என்று எண்ணி; களிற்றின் உச்சி - களிற்றின் தலைமீது; இலைஆர் கடகம் தடக்கை புடைத்து - இலை வடிவம் பொருந்திய கடகம் அணிந்த கையினால் தாக்கி; மெய் சோர்ந்து இருந்தான் - உடல் தளர்ந்து இருந்தான்.

   (வி - ம்.) 'யாப்புறுத்திக் கொண்டேன்' என்றது, அநங்கமாலை. கூத்திற் சீவகன் தனியே வந்தமை கருதி. 'வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே' (வில்லி. பா. சூது. 265).

( 96 )
2198 மைபூத் தலர்ந்த மழைக்கண்
  மாழை மானோ் நோக்கிற்
கொய்பூங் கோதை மடவார்
  கொற்றங் கொள்கென் றேத்தப்
பெய்பூங் கழலான் வேழத்
  திழிந்து பிறைபோற் குலாய
செய்பூண் சிலைநா ணெறிந்தான்
  சேரார் நாளுக் கனவே.

   (இ - ள்.) மைபூத்து அலர்ந்த மழைக்கண் மாழை மான் நோக்கின் - மை அழகு பெற்று மலர்ந்த மழைக்கண்ணால் இளமை பொருந்திய மானை நிகர்க்கும் பார்வையையும்; கொய் பூங்கோதை மடவார் - கொய்து தொடுத்த மலர்க் கோதையையும் உடைய மங்கையர்; 'கொற்றம் கொள்க!' என்று ஏத்த - வெற்றி பெறுக எனப் புகழ; பெய்பூங் கழலான் வேழத்து இழிந்து - பூங்கழலணிந்த சீவகன் வேழத்தினின்றும் இறங்கி; பிறைபோல குலாய செய்பூண் சிலைநாண் எறிந்தான் - பிறையைப்