பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1244 

   (இ - ள்.) விசும்பில் போர்த்தகல் பொறித்திரி பன்றி மூன்றும் வந்து - வானிலே, போருக்குத் தக்கவையான, பொறியாகிய திரிபன்றி மூன்றும் வந்து; நீர்த்தகப் புணர்ந்த போதில் - நீர்மை பொருந்தக் கூடிய காலத்தில்; மூன்றும் அற்றுச் சூர்த்து உடன்வீழ - மூன்றும் அறுபட்டுச் சுழன்று சேர விழுமாறு ஒன்றே புணர்ப்ப நாடி ஓர்த்து நோக்கி - அவை மூன்றும் ஒன்றாகும்படி சேருங் காலத்தைக் கூர்ந்து நோக்கி; சுடுசரம் சிதற வல்லான் நெடுந்தகை - சுடுகணைகளை வீச வல்லவனாகிய சீவகன்; ஒருபகல் காறும் நின்றான் - ஒரு முழுத்த நேரம்வரை நின்றான்.

   (வி - ம்.) போருக்குத் தகுதலையுடைய பன்றி என்றது ஒன்று இடந்திரிய ஒன்று வலந்திரிகின்ற மாறுபாட்டினை. இவள் ஆழிமிசைக்குப் புற நிற்குங் காலத்து அவையும் ஒன்றாம். ஆதலின், 'ஒன்றே புணர்ப்ப' என்றார்.

( 99 )
2201 பொறியின்மே லேற றேற்றா
  னாணினாற் போதல் செய்யா
னெறியின்வில் லூன்றி நிற்ப
  நிழன்மணிப் பன்றி யற்று
மறியுமோ வென்று முன்னே
  மணிமுடி சிதறி வீழ்ந்த
செறிகழன் மன்னர் நக்குத்
  தீயத்தீ விளைத்துக் கொண்டார்.

   (இ - ள்.) பொறியின்மேல் ஏறல் தேற்றான் - ஆழியின் மேல் ஏறலையும் அறியானாய்; நாணினால் போதல் செய்யான் - வெட்கத்தினால் திரும்பி வருதலையும் செய்யானாய்; நெறியின் வில் ஊன்றி நிற்ப - ஒழுங்காக வில்லூன்றி நின்ற அளவிலே; நிழல்மணிப் பன்றி அற்று மறியுமோ என்று - ஒளியுறு மணிகள் இழைத்த பன்றி அற்று வீழுமோ என்று, முன்னே மணிமுடி சிதறி வீழ்ந்த செறிகழல் மன்னர் நக்கு - முன்னர் இச் செயலிலே மணிமுடி சிதறுண்டு வீழ்ந்த கட்டிய கழலையுடைய மன்னர்கள் நகைத்து; தீயத் தீ விளைத்துக் கொண்டார் - தாங்களே தீயுமாறு நெருப்பை விளைத்துக் கொண்டனர்.

   (வி - ம்.) 'நெறியின்' என்றார் அத் தொழிலுக்குப் பொருந்த நின்றநிலை தோன்ற.

( 100 )
2202 சிரற்றலை மணிகள் வேய்ந்த
  திருந்துபொற் றிகிரிச் செம்பொ
னுரற்றலை யுருவப் பன்றி
  யிடம்வலந் திரிய நம்பன்