| மண்மகள் இலம்பகம் |
1245 |
|
|
| 2202 |
விரற்றலைப் புட்டில் வீக்கி | |
வெஞ்சிலை கணையோ டேந்திக் | |
குரற்றலை வண்டு பொங்கக் | |
குப்புற்று நேமி சோ்ந்தான். | |
|
|
(இ - ள்.) திருந்து பொன் திகிரி - அழகிய பொன்னாழியின் மேல் உண்டாகிய; செம்பொன் உரல்தலை - செம்பொன்னால் ஆகிய உரலிடத்து; சிரல்தலை மணிகள் வேய்ந்த உருவப் பன்றி - சிச்சிலிப் பறவையின் தலை போன்ற நிறமுடைய மணிகள் வேய்ந்த உருவமுடைய பன்றி; இடம் வலம் திரிய - இடத்தினும் வலத்தினும் திரியாநிற்க; நம்பன் விரல் தலைப்புட்டில் வீக்கி - சீவகன் தன்விரலிலே விரற்சரட்டை வீக்கி; வெம்சிலை கணையோடு ஏந்தி - கொடிய வில்லையும் கணையையும் ஏந்தி; குரல் தலை வண்டு பொங்க - தன் முடிமயிரிலே வண்டுகள் பொங்குமாறு; குப்புற்று நேமி சேர்ந்தான் - குதித்து அத் திகிரியை அடைந்தான்.
|
|
(வி - ம்.) சிரல் - சிச்சிலிப் பறவை; மீன்கொத்திப் பறவை, சிச்சிலியின் தலைபோன்ற நிறத்தையுடைய மணிகள் என்க. புட்டில் - விரற்சரடு. குரல் மயிர், குப்புற்று - குதித்து.
|
( 101 ) |
| 2203 |
ஒள்ளழல் வைரப் பூணு | |
மொளிர்மணிக் குழையு மின்ன | |
வொள்ளழற் கொள்ளி வட்டம் | |
போற்குலாய்ச் சுழலப் பொன்ஞா | |
ணொள்ளழ னேமி நக்க | |
மண்டல மாக நின்றா | |
னொள்ளழற் பருதி மேலோர் | |
பருதிநின் றதனை யொத்தான். | |
|
|
(வி - ம்.) ஒள் அழல் நக்க நேமி - ஒள்ளிய அழலைச் சிந்தும் திகிரி : ஒள் அழல் கொள்ளிவட்டம் போல் குலாய்ச் சுழல - அவ்வழலையுடைய கொள்ளி வட்டம்போலக் குலவிச் சுழல; ஒள் அழல் வைரப்பூணும் ஒளிர்மணிக் குழையும் மின்ன - ஒள்ளிய அழல் போன்ற வைர அணியும், விளங்கும் மணிக்குழையும் மின் செய; பொன்ஞாண் - பொன்னாணுடன்; மண்டலம் ஆக நின்றான் - அத் திகிரியின் மேலே மண்டல இருப்பாக இருந்தவன்; ஒள் அழல் பருதிமேல் ஓர் பருதி நின்றதனை ஒத்தான் - ஒள்ளிய அழலையுடைய வட்டத்தின்மேல் மற்றொரு ஞாயிறு நின்ற தன்மையைப் போன்றான்.
|