| மண்மகள் இலம்பகம் |
1248 |
|
|
|
(இ - ள்.) விஞ்சையர் வெம்படை கொண்டு வந்தாய் என - வித்தியாதாருடைய கொடிய படைக்கலங்கனைக் கொண்டு வந்தாய் என்று; அஞ்சுவலோ? - அஞ்சுவேனா?; எனது ஆற்றலை அறியாய் - என் வலிமையை நீ அறியாய் ( நீன் தந்தை அறிவன்); வெம்சமம் ஆக்கிடின் - இனி யாம் போர் செய்திட்டால்; உன் வீக்கு அறுத்து - உன் பெருமையைக் கெடுத்து; உன்னொடு வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான் - உன்னையும் என்னைக் களவாற் கொலைசூழ்ந்த நின் மாமனாகிய கோவிந்தனையும் வஞ்சத்தை நீக்குவேன் என்றான்.
|
|
விஞ்சையர் - வித்தியாதரர். அஞ்சுவலோ - அஞ்சேன் என்பதுபட நின்றது. 'அறியாய் எனதாற்றலை' என்றற்கு 'எனதாற்றலை நின் தந்தையறிவன் நீ அறியாய்' என்ற நச்சினார்க்கினியர் நல்லுரை இனிமை மிக்கது. வீக்கு - வீக்கம் : பெருமை. வஞ்சன் என்றது கோவிந்தனை.
|
( 106 ) |
| 2208 |
சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃ | |
தாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம் | |
பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற் | |
காரிடி போன்மத னன்கனன் றிட்டான். | |
|
|
(இ - ள்.) சூரியன் காண்டலும் சூரியகாந்தம். அஃது - சூரியனைக் கண்டதும் சூரிய காந்தமாகிய அஃது; ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் - நிறைந்த அழலை எவ்வாறு உமிழுமோ; அங்ஙனம் - அவ்வாறே; பேரிசையான் இசை கேட்டலும் - சீவகன் வெற்றியைக் கேட்ட அளவிலே; முகில்பெய் கார் இடி போல் மதனன் கனன்றிட்டான் - மழையைப் பெய்யும் கார்கால இடிபோல மதனன் சினந்தான்.
|
|
(வி - ம்.) சூரியன் - சூரியனுடைய ஒளிக்கு ஆகுபெயர். அவ்வொளி சீவகனுடைய புகழுக்கு உவமை என்க. பேரிசையான் என்றது சீவகனை. கார் - கார்காலம்.
|
( 107 ) |
| 2209 |
காற்படை யுங்களி றுங்கலி மாவொடு | |
நூற்படு தேரு நொடிப்பினிற் பண்ணி | |
நாற்படை யுந்தொகுத் தான்மக்க ணச்சிலை | |
வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார். | |
|
|
(இ - ள்.) கால் படையும் களிறும் கலிமாவொடு நூல்படு தேரும் - (கட்டியங்காரன்) காலாளாகிய படையும் யானையும் குதிரைப் படையோடு நூல்வழிப்பட்ட தேரும்; நொடிப்பினில் பண்ணி - விரைவினில் சமைத்துக் கொண்டு; நாற்படையும் தொகுத்தான் - நால்வகைப் படையையும் கூட்டினான்; மக்கள்
|