பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1249 

நச்சிலை வேல்படை வீரர் ஓர் நூற்றுவர் தொக்கார் - (அப்போது) மக்களாகிய, நஞ்சுடைய இலைவடிவ வேலேந்திய வீரர் நூற்றுவரும் திரண்டனர்.

   (வி - ம்.) காற்படை - காலாட்படை, கலிமா - குதிரை. நூல் - கம்மநூல். மக்கள் - கட்டியங்காரன் மக்கள் என்க. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை (அலகு.)

( 108 )
2210 விற்றிற லான்வெய்ய தானையும் வீங்குபு
செற்றெழுந் தான்படை யுஞ்சின மொய்ம்பொடு
மற்றவர் மண்டிய வாளமர் ஞாட்பினு
ளுற்றவர்க் குற்றதெ லாமுரைக் குற்றேன்.

   (இ - ள்.) வில் திறலான் வெய்ய தானையும் - சீவகனுடைய கொடிய படையும்; வீங்குபு செற்று எழுந்தான் படையும் - மிகுந்து சீறி எழுந்த கட்டியங்காரன் படையும்; சினமொய்ம்பொடு அவர் மண்டியவாள் அமர் ஞாட்பினுள் - சினமும் ஆற்றலுங் கொண்டு அவர்கள் மிக்குச்சென்ற வாட்போராகிய போரிலே உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன் - கலந்து கொண்டவர்க்கு நேர்ந்ததை எல்லாம் கூறத் தொடங்கினேன்.

   (வி - ம்.) உற்றது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம்

   திறலான் : சீவகன். எழுந்தான் : வினையாலணையும் பெயர் ; கட்டியங்காரன். மொய்ம்பு - வலிமை. உரைத்தலருமை தோன்ற உரைக்குற்றேன் என்றார்.

( 109 )

வேறு

2211 அத்தமா மணிவரை யனைய தோன்றல
மத்தகத் தருவியின் மணந்த வோடைய
முத்துடை மருப்பின முனைக்கண் போழ்வன
பத்தியிற் பண்ணின பரும யானையே.

   (இ - ள்.) அத்தம் ஆம் அணிவரை அனைய தோன்றல - அத்தகிரியை ஒத்த தோற்றத்தை உடையன; மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய - அதன் அருவிபோல மத்தகத்த மணந்த ஓடையின; முத்து உடை மருப்பின - முத்துக்களையுடைய மருப்பின; முனைக்கண் போழ்வன - பகைப்புலத்தை அங்கேயே பிளப்பன ஆகிய; பரும யானை பத்தியிற் பண்ணின - புனைவுற்ற யானைகள் அணிகளிலே சமைந்தன.

   (வி - ம்.) தோன்றல - தோற்றத்தையுடைன. மத்தகம் - தலை. ஓடை - முகபடாம். மருப்பின - கொம்பினையுடையன. முனை- போர் முனை.

( 110 )