மண்மகள் இலம்பகம் |
1252 |
|
|
முன் உருத்து ஆர்த்து எழ - முன் சினந்து ஆரவாரித்து எழ ; புரவி மொய்த்த - புரவிகள் மொய்த்தன.
|
(வி - ம்.) இரண்டு செய்யுட்களும் குதிரைப் படையைக் கூறின.
|
கொன்னுனை : வினைத்தொகை. நுதி - நுனை. மின்னிலை - மின்னலின் தன்மை. மிலேச்சர் சோனகர். அரி - பரல். புட்டில் - கெச்சை ; கெச்சையுமாம். பொங்குபு பொங்கி.
|
( 115 ) |
2217 |
மாலையுங் கண்ணியு மணந்த சென்னிய | |
ராலுபு செறிகழ லார்க்குங் காலினர் | |
பாலிகை யிடையறப் பிடித்த பாணியர் | |
சாலிகை யுடம்பினர் தறுக ணாளரே. | |
|
(இ - ள்.) மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர் - மாலையையும் கண்ணியையும் அணிந்த முடியினர்; ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர் முழங்கிச் செறிந்த காலைக் கட்டினர்; பாலிகை இடைஅறப் பிடித்த பாணியர் வாட்பிடியை இடையறாமற் பிடித்த கையினர்; சாலிகை உடம்பினர் - கவசம் அணிந்த மெய்யினர்; தறுகணாளர் - இவர்கள் அஞ்சாத காலாட்கள்.
|
(வி - ம்.) மாலை, கண்ணி என்பன மாலைவகை. ஆலுபு - ஆலி; முழங்கி என்க. பாலிகை - வாட்பிடி. பாணியர் - கையினர். சாலிகை - கவசம். தறுகணாளர் சென்னியரும் காலினரும் பாணியரும் உடம்பினருமாக இருந்தனர் என்றவாறு.
|
( 116 ) |
2218 |
போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் | |
வார்மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையு | |
நோ்மரப் பலகையு நிரைத்த தானையோர் | |
போர்முகப் புலிக்கடல் புகுந்த தொத்ததே. | |
|
(இ - ள்.) போர் மயிர்க் கேடகம் - மயிர் போர்த்த பரிசை; புளகத் தோற்பரம் - கண்ணாடி தைத்த கிடுகு; வார் மயிர்க் கிடுகொடு - நீண்ட மயிர்க்கிடுகு; வள்ளித் தண்டையும் - பிரபபங் கொடியாற் பின்னின பரிசை; நேர் மரப்பலகையும் - வலிய பலகை ஆகியவற்றை; நிரைத்த தானை - நிரைத்த அக் காலாளாகிய படை; ஓர் போர்முகப் புலிக்கடல் புகுந்தது ஒத்தது - ஒரு போர்க்களத்திற் புலிக்கடல் புகுந்தது போன்றது.
|
(வி - ம்.) 'பரந்தது' எனவும் பாடம். இவ்விரண்டு செய்யுட்களும் காலாட் படையைக் கூறின.
|
போர்மயிர் ; வினைத்தொகை. கேடகம், தோற்பரம், கிடுகு; தண்டை, பலகை என்பன ஒருபொருள் குறித்த பன்மொழி.
|
( 117 ) |