பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1253 

வேறு

2219 பார்நனை மதத்த பல்பேய்
  பருந்தொடு பரவச் செல்லும்
போர்மதக் களிறு பொற்றோ்
  நான்கரைக் கச்ச மாகு
மோ்மணிப் புரவி யேழா
  மிலக்கமேழ் தேவ கோடி
கார்மலி கடலங் காலாள்
  கற்பகத் தாரி னாற்கே.

   (இ - ள்.) கற்பகத் தாரினாற்கு - சீவகனுக்கு; பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும் - நிலம் நனையச் சொரியும் மதத்துடன் பல பேய்களும் பருந்தும் பரவச் செல்கின்ற; போர்மதக் களிறு பொன்தேர் நான்கரைக் கச்சம் ஆகும் - போருக்குரிய மதக்களிறுகளும் பொன்தேர்களும் நான்கரைக் கச்சம் என்னும் தொகையின; ஏர்மணிப் புரவி ஏழாம் இலக்கம் - அழகிய மணிகள் கட்டிய குதிரைகள் ஏழுநூறாயிரம்; கார்மலி கடல் அம் காலாள் ஏழ்தேவ கோடி - கருமை பொருந்திய கடலனைய காலாட்படை ஏழுதேவ கோடி ஆகும்.

   (வி - ம்.) கச்சம், தேவகோடி என்பன எண்ணுப் பெயர்கள்.

   பூரிமுழுதினையும் நனைத்தற்குப் போதிய மதத்தையுடையன என்பது கருத்து. பேயும் பருந்தம் ஊனுண்டன் கருதிப் பரவ என்க. ஏர் - அழகு; எழுச்சியுமாம். இலக்கம் - நூறாயிரம். தேவகோடி - ஓர் எண்ணுப்பெயர்.

( 118 )
2220 நிழன்மணிப் புரவித் திண்டோ்
  நிழறுழாய்க் குனிந்து குத்து
மழறிகழ் கதத்த யானை
  யைந்தரைக் கச்ச மாகு
மெழின்மணிப் புரவி யேழா
  மிலக்கமேழ் தேவ கோடி
கழன்மலிந் திலங்குங் காலாள்
  கட்டியங் காரற் கன்றே.

   (இ - ள்.) கட்டியங்காரற்கு - கட்டியங்காரனுக்கு; நிழல் மணிப் புரவித் திண்தேர் - ஒளிவிடும் மணிகளையுடைய குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரும்; நிழல் துழாய்க் குனிந்து குத்தும் அழல் திகழ் கதத்த யானை - தன் நிழலைச் சீறித் துழவித் தாழ்ந்து குத்துகின்ற, தழல்போல விளங்கும் சினமுடைய களிறு