மண்மகள் இலம்பகம் |
1255 |
|
|
2223 |
முடிமன ரெழுதரு பருதி மொய்களி | |
றுடைதிரை மாக்கல மொளிறு வாட்படை | |
யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன | |
கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே. | |
|
(இ - ள்.) முடிமனர் எழுதரு பருதி - முடிவேந்தர் எழுகின்ற ஞாயிறாகவும்; மொய்களிறு கலம் - நெருங்கிய களிறுகள் கடலிற் செல்லும் மரக்கலமாகவும்; உடை திரை மா - மோதுகின்ற அலைகள் குதிரைகளாகவும்; ஒளிறு வாட்படை அடுதிறல் எறி சுறா ஆக - விளங்கும் வாட்படை அடுந்திறமுடைய சுறா மீனாகவும்; காய்ந்தன கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்தது - தம்மிற் காய்ந்தனவாகிய இரண்டு கடல்கள் போர் செய்ய எதிர்ந்த காலம் போன்றது இக்காலம்.
|
(வி - ம்.) மனர் - மன்னர். பருதி - ஞாயிறு. கலம் - கப்பல், சுறா - ஒருவகை மீன். ஒரு காலமுண்டாயின் அதனை ஒத்தது இக்காலம் என்க. மூன்றாம் அடியில் வந்த ஆக என்பதைப் பருதி, கலம் மா என்பவற்றோடுங் கூட்டுக.
|
( 122 ) |
2224 |
அருங்கணை யடக்கிய வாவ நாழிகை | |
பெரும்புறத் தலமரப் பிணிந்த கச்சினர் | |
கருங்கழ லாடவர் கருவில் வாய்க்கொளீஇச் | |
சொரிந்தனர் கணைமழை விசும்பு தூர்ந்ததே. | |
|
(இ - ள்.) அருங்கணை அடக்கிய ஆவ நாழிகை - அரிய அம்புகள் அடக்கிய அம்பறாத் தூணி; பெரும்புறத்து அலமரப் பிணித்த கச்சினர் - பெரிய முதுகிலே அசையுமாறு பிணித்த கச்சினராகிய; கருங்கழல் ஆடவர் - கொடிய கழலைக் கட்டிய வீரர்; கருவில் வாய்க் கொளீஇ - பெரிய வில்லிண் வாயில் அமைத்து; கணைமழை சொரிந்தனர் - அப்புமாரி பெய்தனர் விசும்பு தூர்ந்தது - அதனால் வானம் மறைந்தது.
|
(வி - ம்.) கச்சு : இடைக் கச்சுமாம்.
|
அருங்கணை - தடுத்தலரியகணை என்க. ஆவநாழிகை - அம்பறாத்தூணி. கருங்கழல் கருவில் என்பவற்றுள் கருமை - கொடுமைப்பண்பு குறித்தது.
|
( 123 ) |
2225 |
நிணம் பிறங் ககலமுந் தோளு நெற்றியு | |
மணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென | |
மணங்கமழ் வருபுனன் மறலு மாந்தரிற் | |
பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே. | |
|
(இ - ள்.) நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும் - நிணம் விளங்கும் மார்பும் தோளும் நெற்றியும்; அணங்கு அருஞ்
|