பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1256 

சரங்களின் அழுத்தி - வருத்தும் அரிய கணைகளினாலே அழுத்தி (பெருகும் குருதியிலே நின்று); மணம் கமழ் வருபுனல் ஐயென மறலும் மாந்தரின் - மணம் பெருக வரும் புதுநீரிலே விரைந்து பொரும் மக்களைப் போல; பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னது - மாறுபட்ட போரை மேற்கொண்டவரின் தன்மை இத்தகையது.

   (வி - ம்.) பிறங்குதல் - விளங்குதல். அணங்கு - வருத்துதல். சரம் - அம்பு. அழுத்த அவ்வழிப் பெருகிய குருதியினின்று என விரிந்தோதுக. புதுப்புனல் சிவந்திருத்தலின் குருதிப் பெருக்கிற் குவமையாகக் கொள்ளப்பட்டது.

( 124 )
2226 கழித்தனர் கனலவாள் புகைந்து கண்கடீ
விழித்தன தீந்தன விமைகள் கூற்றெனத்
தெழித்தனர் திறந்தன ரகல மின்னுயி
ரழித்தன ரயிலவ ரரவ மிக்கதே.

   (இ - ள்.) கூற்று எனத் தெழித்தனர் - கூற்றுவனைப் போலச் சீறினர்; கண்கள் தீ விழித்தன - கண்கள் நெருப்பெழ விழித்தன; இமைகள் தீந்தன - (அதனால்) இமைகள் கரிந்தன; வாள் புகைந்து கனலக் கழித்தனர் - (ஆகவே) வாள் புகைந்து அழலும்படி உறையிலிருந்து நீக்கினர்; அகலம் திறந்தனர் - மார்பைப் பிளந்தனர்; இன் உயிர் அழித்தனர் - இனிய உயிரைப் போக்கினர் ; அயிலவர் அரவம் மிக்கது - (பின்னர்) வேல்வீரர் ஒலி மிகுந்தது.

   (வி - ம்.) கூற்று - கூற்றுவன். தெழித்தனர் அதனால் கண் தீ விழித்தன. அதனால் இமைகள் தீந்தன என்க. அயிலவர் - வேல்மறவர்.

( 125 )
2227 பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை
யரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன
கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர
விருங்கனி சொரிவன போன்ற வென்பவே.

   (இ - ள்.) பொரும் களத்து ஆடவர் பொருஇல் பைந்தலை - போர் செய்யும் களத்திலே வீரர்களின் ஒப்பற்ற கரிய தலைகள்; அரும்பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன - பெறுதற்கரிய தும்பை மாலைகளுடன் அற்று வீழ்கின்றவை; கருங்கனிப் பெண்ணை அம் கானம் கால்பொர - கரிய கனிகளையுடைய பனைக்காடு, காற்றடித்தலின், இருங்கனி சொரிவன போன்ற - பெரிய கனிகளைச் சொரிவன போன்றன.

   (வி - ம்.) அரும் பெறற் கண்ணி என்றது ஈண்டுத் தும்பை மாலையை. பெண்ணை - பனை, ”தலையிறுபு தாரொடு புரள..... நீள் இரும்