மண்மகள் இலம்பகம் |
1258 |
|
|
(இ - ள்.) அஞ்சனம் எழுதின-மையால் எழுதப்பட்டவை; கவளம் ஆர்ந்தன - கவளத்தை நிறைய உண்டவை; கூற்றொடு கொம்மை கொட்டுவ கூற்றை நன்கு மதித்துத் தட்டியழைப்பவை; அஞ்சனவரை சிறகுடைய போல்வன - (செல்லும் விரைவால்) கரிய மலைகள் சிறகு பெற்றவை போன்றன; மஞ்சு இவர் குன்று என - முகில் தவழுங் குன்றுகளைப் போல; வேழம் குஞ்சரம் மலைந்த - யானையும் யானையும் பொருதன.
|
(வி - ம்.) மஞ்சு : கொடிக்குவமை.
|
அஞ்சனம் - மை. ஆர்ந்தன - உண்டவை. குஞ்சரம் - யானை கொம்மை கொட்டுதல் - தட்டியழைத்தல். ஒருகாலத்தே மலைகளுக்குச் சிறகிருந்தன என்பது புராணம். மஞ்சு - முகில். மலைந்தன - போரிட்டன.
|
( 129 ) |
2231 |
மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட் | |
டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும் | |
போக்கறப் பொருவன போன்று தீப்படத் | |
தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே. | |
|
(இ - ள்.) மாக்கடல் பெருங்கலம் - பெரிய கடலிலே செல்லும் பெரிய மரக்கலங்கள்; காலின் மாறுபட்டு காற்றினாலே மோதப்பட்டு; ஆக்கிய கயிறு அரிந்து - நங்குரத்திற் கட்டிய கயிறு அற்று; எங்கணும் போக்கு அற ஓடி - எவ்விடத்தினும் போக்கின்றி ஒடி; பொருவன போன்று - தம்மில் மோதுவன போன்று; அரசு உவாத் தம்முள் தீப்படத் தாக்கின - அரசர் ஏறிய யானைகள் தம்முள் கோடுங் கோடுஞ் சந்தித்துத் தீப்பிறக்கும்படி பொருதன .
|
(வி - ம்.) மாக்கடல் - பெரிய கடல். பெருங்கலம் - பெரிய மரக்கலம்; கால் - காற்று. கயிறரிய என்க. அரசுவா - அரசர் ஏறிய யானை.
|
( 130 ) |
2232 |
விடுசரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன் | |
படுகதிர் மறைந்திருள் பரந்த தாயிடை | |
யடுகதி ரயிலொளி யரசர் மாமுடி | |
விடுகதிர் மணியொளி வெயிலிற் காய்ந்தவே. | |
|
(இ - ள்.) விடுசரம் விசும்பிடை மிடைந்து - விட்ட கணைகள் வானிலே நெருங்குதலின்; வெய்யவன் படுகதிர் மறைந்து இருள் பரந்தது - ஞாயிற்றின் கதிர்கள் மறைந்து இருளும் பரவியது: ஆயிடை - அப்போது; அடுகதிர் அயில் ஒளி - சுடுங் கதிர்களையுடைய படைக்கலங்களின் ஒளியும்; அரசர் மாமுடி மணிவிடு கதிர் ஒளி - அரசரின் முடியிலுள்ள மணிகள்
|