மண்மகள் இலம்பகம் |
1259 |
|
|
விடும் ஒளியும்; வெயிலின் காய்ந்தன - வெயில் கெடுப்பதைப் போலக் கெடுத்தன.
|
(வி - ம்.) விடுசரம் : வினைத்தொகை. சரம் - அம்பு. வெய்யவன் - ஞாயிறு. ஆயிடை - அப்பொழுது. அடுகதிர் அயில் : வினைத்தொகை. அயில் - வேல். விடுகதிர் : வினைத்தொகை. வெயிலின் - வெயில்போல.
|
( 131 ) |
2233 |
பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான் | |
காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச் | |
சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான் | |
மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ. | |
|
(இ - ள்.) பூண் குலாம் வனமுலைப் பூமி தேவிதான் - அணி கலந்த அழகிய முலைகளையுடைய நிலமகள்; கடியன கண்ணினாற் காண்கலேன் எனா - இவ்வாறு கடியவற்றை என் கண்களாற் காணமாட்டேன் என்று; மாண்குலாம் குணத்தினால் - பெருமை பொருந்திய தன் பண்பினால் கருதி; சேண்குலாம் கம்பலம் செய்யது ஒன்றினால் - பெரிய நிலமெல்லாம் பரவக்கூடிய கம்பலமாகிய சிவந்த ஒன்றினால்; மறைத்திட்டாள் - மறைத்துக் கொண்டாள்.
|
(வி - ம்.) 'குணத்தினாள்' என்றும் பாடம்.
|
பூமிதேவி - நிலமகள், தான் : அசை. காண்கலேன் : தன்மையொருமை எதிர்மறை வினைமுற்று. கண்ணினால் கடியன காண்கலேன் என மாறுக. கடியன - கொலைமுதலிய கொடுந்தொழில். ஒரு செய்ய கம்பலத்தால், என்றவாறு. செய்யகம்பலம் குருதிக்குவமை. மாண்குலாம் குணம் காணமாட்டாமைக்கு ஏதுவென்க.
|
( 132 ) |
வேறு
|
2234 |
கலைக்கோட்ட வகலல்குற் | |
கணங்குழையார் கதிர்மணிப்பூண் | |
முலைக்கோட்டா லுழப்பட்ட | |
மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர் | |
மலைக்கோட்ட வெழில்வேழந் | |
தவநூறி மதயானைக் | |
கொலைக்கோட்டா லுழப்பட்டுக் | |
குருதியுட் குளித்தனரே. | |
|
(இ - ள்.) கலைக்கோட்ட அகல் அல்குல் கணங்குழையார் - கலையணிந்த பக்கத்தையுடைய பரவிய அல்குலையும் திரண்ட குழையையும் உடைய மகளிரது; கதிர்மணிப் பூண்முலைக் கோட்
|