| 231 |
கரும்பார் தோண்முத்தங் கழன்றுசெவ் வாய்விளர்த்துக் |
| |
கண்பசலை பூத்த காமம் |
| |
விரும்பார் முலைக்கண் கரிந்துதிங்கள் வெண்கதிர்கள் |
| |
பெய்திருந்த பொற்செப் பேபோ |
| |
லரும்பால் பரந்துநுசுப் புங்கண்ணின் புலனாயிற் |
| |
றாய்ந்த வனிச்ச மாலை |
| |
பெரும்பார மாய்ப்பெரிது நைந்துநற்சூற் சலஞ்சலம்போ |
| |
னங்கை நலந்தொ லைந்ததே. |
|
(இ - ள்.) கரும்புஆர் தோள் முத்தம் கழன்று - (வயாவிற்கு) கரும்பனைய தோள் முத்தம் கழல மெலிந்து; செவ்வாய் விளர்த்துக் கண் பசலைபூத்த - செவ்வாய் வெளுத்துக் கண்கள் பசலை பூத்தன; காமம் விரும்பு ஆர்முலைகண் கரிந்து - (பின்பு சூல்முதிரும் அளவிற்குக்) காமத்தை விரும்புதற்குக் காரணமான முலைக்கண் கருகி; திங்கள் வெண்கதிர்கள் பெய்திருந்த பொன் செப்பேபோல் அரும்பால் பரந்து - திங்களின் வெண்கதிர்களைப் பெய்துவைத்த பொற் செப்பினைப்போல் அரிய பால் நிறைந்து; நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று - இடையுங் கண்களுக்குக் காட்சியாயிற்று; ஆய்ந்த அனிச்சமாலை பெரும் பாரமாய் - சுருங்கிய அனிச்ச மாலையும் பெரும் பாரமாகி; நற்சூல் சலஞ்சலம்போல் பெரிதும் நைந்து நங்கை நலம் தொலைந்தது - நல்ல சூலையுடைய சலஞ்சலம்போல மிகவும் நைந்து விசயையின் அழகு தொலைந்தது.
|
|
|
(வி - ம்.) நுசுப்பு : உம் : சிறப்பும்மை.
|
( 202 ) |
வேறு
|
|
| 232 |
தூம்புடை நெடுங்கை வேழந் |
| |
துற்றிய வெள்ளி லேபோற் |
| |
றேம்புடை யலங்கன் மார்பிற் |
| |
றிருமகன் றமிய னாக |
| |
வோம்படை யொன்றுஞ்
செப்பா |
| |
டிருமக ளொளித்து நீங்க |
| |
வாம்புடை தெரிந்து வேந்தற் |
| |
கறிவேனு மமைச்சன் சொன்னான். |
|
|
(இ - ள்.) தேம்புஉடை அலங்கல் மார்பின் திருமகன் - கெடுதலுடைய, மாலைமார்பனான திருமகன்; தூம்பு உடை
|
|