பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1261 

2236 தோலாப்போர் மறமன்னர்
  தொடித்தோள்க ளெடுத்தோச்சி
மேலாண்மே னெருப்புமிழ்ந்து
  மின்னிலங்கு மயில்வாளாற்
காலாசோ டறவெறிந்த
  கனைகழற்கா லலைகடலு
ணீலநீர்ச் சுறாவினம்போ
  னெய்த்தோருட் பிறழ்ந்தனவே.

   (இ - ள்.) தோலாப்போர் மறமன்னர் தொடித் தோள்கள் எடுத்து ஒச்சி - தோல்வியடையாத போரைச் செய்த வீரமுடைய வேந்தர்கள் தம்முடைய தொடி அணிந்த தோளை எடுத்து வீசி; நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் - தீயைக் கக்கி ஒளி வீசும் கூரிய வாளால்; கால் ஆசோடுஅற - கால் கவசத்துடன் அறும்படி; மேலாள் மேல் எறிந்த - யானைமீதிருப் போரை வெட்டியபோது; கனைகழல் கால்-ஒலிக்கும் கழலணிந்த அக்கால்கள்; அலைகடலுள் - அலைகடலிலே; நீலநீர்ச் சுறாவினம் போல் - நீலநிறச் சுறாவின் இனம்போல; நெய்த்தோருள் பிறழ்ந்தன - குருதியிலே பிறழ்ந்து கிடந்தன.

   (வி - ம்.) 1.கவசம் அணிந்த காலுக்கு நீலச்சுறா உவமை.

   தோலா - தோலாத. மேலாள் - யானை மீதிருக்கும் மறவர். அயில் வாள் - கூரிய வாள். ஆசு - கவசம். கால் சுறாவினம்போல் நெய்த்தோருள் பிறழ்ந்தன என்க. நெய்த்தோர் - குருதி.

( 135 )
2237 கருவியூ டுளங்கழிந்த கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து
குருவிசோ் வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த
வுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்து
பருதிசோ் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே.

   (இ - ள்.) கருவியூடு - கருவியினூடே சென்று; கணை மொய்ப்ப - அம்புகள் மொய்த்தலின்; குஞ்சரம் உளங்கழிந்து - சில யானைகள் நினைவு தப்பி; குருவி சேர் வரை போன்ற - குருவி


1. ”காலாசோ டற்ற கழற்கால் இருங்கடலுள் - நீலச்சுறாப

பிறழ்வ போன்ற புனனாடன் - நேராரை அட்ட களத்து.” (களவழி. 9)

குன்றத் திறுத்த குரீஇனம் போல - அம்புசென்று

இறுத்த அரும்புண் யானை.' (புறநா. 19 : 89)

யானைமேல் யானை நெறிதர ஆனாது

கண்ணேர் கடுங்கணை மெய்ம்மறைப்ப எவ்வாயும்

எண்ணருங் குன்றிற் குரீயினம் போன்றவே.' (களவழி. 8)