மண்மகள் இலம்பகம் |
1263 |
|
|
(இ - ள்.) அஞ்சன நிறம் நீக்கி முற்பட அஞ்சன நிறத்தைப் போக்கி; அரத்தம் போர்த்து - செந்நிறத்தைப் பூசுதலால்; இங்குலிக இறுவரை போன்று - சாதிலிங்கத்தையுடைய பெரிய மலையை ஒத்து. இடைமிடைந்த இனக்களிறு - செறிந்த யானைத் திரள்கள், அமர் உழக்கிக் குஞ்சரங்கள் பாய்ந்திடலின் - போரிலே கலக்கிச் சென்று பகைவரின் யானைகளைத் தாக்குவதால்; குமிழிவிட்டு உமிழ் குருதி - குமிழ் விட்டுப் பாயும் குருதி; இங்குலிக அருவி போன்று - சாதிலிங்க அருவிபோலே; எவ்வாயும் தோன்றின - எப்பக்கமும் காணப்பட்டன.
|
(வி - ம்.) 'அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி
|
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே' |
|
(களவழி.7)
|
( 138 ) |
2240 |
குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச் | |
செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த | |
பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை | |
யஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே. | |
|
(இ - ள்.) குஞ்சரம் தலை அடுத்து - குஞ்சரத்தைத் தலை அணையாக அடுத்து; கூந்தல் மாகால் அணையா - குதிரையைக் காலணையாகக் கொண்டு; சினவுவாள் பிடித்து உடுத்த பஞ்சிமேல் - சினத்துக்குரிய வாளைப்பிடித்து, உடுத்த ஆடையின் மேலே; உடைஞாண் கிடந்து பதைத்தது இலங்க - வல்லிக்கயிறு கிடந்து துளங்கியிலங்க; செஞ்சோற்றுக்கடன் நீங்கிக் கிடந்தாரை - செஞ்சோறாகிய கடன் நீங்கும்படி பட்டுக் கிடந்தவரை; அஞ்சிப் போந்து - அஞ்சிச் சென்று : இன நரியோடு ஓரிநின்று அலறும் - இன நரியும் ஓரியும் அலறும்.
|
(வி - ம்.) நீங்கி - நீங்க. பஞ்சி - ஆடை : ஆகுபெயர்.
|
தலை - தலையணை : ஆகுபெயர் செஞ்சோற்றுக்கடன் ; தாம் அது காறும் இனிதின் உண்டிருந்த செவ்விய சோற்றுக்கடன். அஃதாவது தம்மைப்புரந்த மன்னர்க்கு உற்றுழித் தம்முயிரைக் கொடுத்தல். ”சோறுவாய்த் தொழிந்தோர்” (72) என்றார் முல்லைப் பாட்டினும்.
|
( 139 ) |
2241 |
காதலார்க் கமிர்தீந்த கடற் பவழக் கடிகைவா | |
யேதிலாப் புள்ளுண்ணக் கொடேமென்று வாய்மடித்துக் | |
காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகா | |
வீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே. | |
|
(இ - ள்.) வீததைந்த வரைமார்பர் - மலர் நெருங்கிய மலையனைய மார்பர்; காதலார்க்கு அமிர்து. ஈந்த கடல் பவழக் கடிகை
|