| மண்மகள் இலம்பகம் | 
1265  | 
 | 
  | 
| 2243 | 
புரையறுபொன் மணியோடைப் |   | 
  பொடிபொங்கப் பொருதழிந் |   | 
தரைசோடு மரசுவா |   | 
  வடுகளத்து ளாழ்ந்தனவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வளை எயிற்றுக் கொழுங்குருதி நிறையுளை அரி நன்மா - வளைந்த எயிற்றினையும் கொழுவிய குருதி படிந்த, ஒழுங்குற்ற பிடரி மயிரினையும் உடையனவாகிய சிங்கங்கள்; உரும் இடிப்ப - இடி இடித்தலின்; வரையோடும் நிலமிசைப் புரள்வன போல் - மலைகளோடே வீழ்ந்து குருதியையுடைய நிலமிசைப் புரள்வனபோல்; புரையறு பொன் மணியோடைப் பொடிப் பொங்க - குற்றம் அற்ற மணிகளிழைத்த பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தில் மணிகள் பொடியாய்ப் பொங்கும்படி; பொருது அழிந்த அரசுவாவோடு - போர் செய்து வீழ்ந்த அரசு யானைகளுடன்; அரைசு அடுகளத்துள் ஆழ்ந்தன - அரசுகள் களத்தே வீழ்ந்து புரண்டன. 
 | 
| 
    (வி - ம்.) குருதி படிந்தனவாதலின் மணிகள் பொடித்துப் பொங்கல் உவமையாக வேண்டும். அரசு என்பது அரைசு எனப் போலியாய் நின்றது எதுகை நோக்கி. அரசு + உவா = அரசுவாஎனக் குற்றியலுகரம் கெட்டுப்புணர்ந்தது. அரசர்கட்குத் தகுதியான இலக்கணம் பொருந்தியிருப்பது அரசுவா எனப்படும். 
 | 
( 142 ) | 
| 2244 | 
தடம்பெருங் குவளைக்கட் டாழ்குழலார் சாந்தணிந்து |   | 
வடந்திளைப்பப் புல்லிய வரைமார்பம் வாள்புல்ல |   | 
நடந்தொழுகு குருதியு ணகாக்கிடந்த வெரிமணிப்பூ |   | 
ணிடம்படு செவ்வானத் திளம்பிறைபோற் றோன்றினவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தடம் பெருங்குவளைக் கண் தாழ்குழலார் - மிகப் பெரிய குவளைபோலும் கண்களையுடைய, நீண்ட கூந்தல் மகளிர்; சாந்து அணிந்து - தாமே சாந்தைப் பூசி; வடம் திளைப்பப் புல்லிய வரை மார்பம் - முத்துமாலை அழுந்தத் தழுவிய மலையனைய மார்பை; வாள் புல்ல - வாள் தழுவுதலின்; நடந்து ஒழுகு குருதியுள் - வடிந்து போகின்ற குருதியிலே; நகாக் கிடந்த எரிமணிப் பூண் - விளங்கிக் கிடந்த முத்துவடம்; இடம்படு செவ்வானத்து - இடம் பரவிய செவ்வானத்திலே; இளம் பிறைபோல் தோன்றின - இளம்பிறையெனக் காணப்பட்டன. 
 | 
| 
    (வி - ம்.) இது வரை இரண்டு படைக்கும் பொது. 
 | 
| 
    தடங்கண் பெருங்குவளைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தாழ் குழல். வினைத்தொகை. நகாக்கிடந்த - நக்குகிடந்த. செவ்வானம் குருதிக்குவமை ; பூணுக்குப் பிறையுவமை. 
 | 
( 143 ) |