பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1269 

   மாக வரும் தேர் என்க. குடுமி கொள்ளல் - வெற்றிகொள்ளுதல். கண்ணுதன் மூர்த்தி - சிவபெருமான்.

( 148 )
2250 செண்பகப் பூங்குன் றொப்பான்
  றேவமா தத்தன் வெய்தா
விண்புக வுயிரைப் பெய்வான்
  வீழ்தரு கடாத்த வேழ
மண்பக விடிக்குஞ் சிங்க
  மெனக்கடாய் மகதர் கோமான்
றெண்கடற் றானை யோட
  நாணிவேல் செறித்திட் டானே.

   (இ - ள்.) செண்பகப் பூங்குன்று ஒப்பான் தேவமா தத்தன் - பொன் அணிதலின் சண்பகம் மலர்ந்த மலையைப் போன்றவனாகிய தேவதத்தன் என்பவன்; வெய்தா விண்புக உயிரைப் பெய்வான் - விரைவிலே வானிற் செல்லும்படி பல் உயிரையும் செலுத்த வேண்டி; வீழ்தரு கடாத்த வேழம் மண்பக இடிக்கும் சிங்கம் எனக் கடாய் பெய்கின்ற மதமுடைய யானையின் மீது, நிலம் பிளக்க முழங்கும் சிங்கம் போல அமர்ந்து அதனைச் செலுத்தியபோது; மகதர் கோமான் தெண்கடல் தானை ஓட - அவனைக் கண்டு மகத மன்னனின் கடலனைய சேனை ஓடக் கண்டு; நாணி வேல் செறித் திட்டான் - வெள்கி, வேலை உறையிலே சேர்த்திட்டான் (மீண்டான்.)

   (வி - ம்.) செண்பகப்பூ - பொன்னணிகலனுக்குவமை. உயிரை விண்புகப் பெய்வான் என்க. உயிர் - பகைவர் உயிர். இடிக்கும் - முழங்கும். கடாய் - கடாவி; செலுத்தி. வேல்செறித்திட்டான் என்பது மீண்டான் என்பது பட நின்றது.

( 149 )
2251 சின்னப்பூ வணிந்த குஞ்சிச்
  சீதத்தன் சினவு பொன்வாண்
மன்னருட் கலிங்கர் கோமான்
  மத்தகத் திறுப்ப மன்னன்
பொன்னவிர் குழையும் பூணு
  மாரமுஞ் சுடர வீழ்வான்
மின்னவிர் பருதி முந்நீர்க்
  கோளொடும் வீழ்வ தொத்தான்.

   (இ - ள்.) சின்னப்பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன் வாள் - விடுபூவை அணிந்த சிகையையுடைய சீதத்தன் தன் புகையும் வாளை; மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து