பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 127 

நெடுங்கை வேழம் தூற்றிய வெள்ளிலேபோல் - துளைபொருந்திய நீண்ட கையுடைய யானையின் பெயரையுடைய நோயால் உண்ணப்பட்ட விளம் பழம்போல; தமியன்ஆக - அரசுரிமையிழந்து தனித்துப் போமாறு; ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க - பரிகாரம் சிறிதும் கூறாளாய்த் திருமகள் மறைந்து போக; ஆம்புடை தெரிந்து அறிவு எனும் அமைச்சன் வேந்தற்குச் சொன்னான் - ஆகவேண்டிய [சீவகன் பிழைப்பதாகிய] ஒரு கூறுபாட்டைத் தெரிந்து அறிவு என்கிற அமைச்சன் வேந்தனுக்குரைத்தான்.

 

   (வி - ம்.) வேழம் : விளவிற்கு வருவதொர் நோய்; 'குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம்' (சீவக. 2182) போல வேழத்திற்குக் கை அடை. தேம்புதலுடைய திருமகன்; தேம்புதல் - கெடுதல்; தேம்பு - முதல் நிலைத்தொழிற் பெயர். 'புள்தேம்பப் புயல்மாறி' (பட். 4) என்றார் பிறரும். 1.அவன் வஞ்சித்து அரசு வெளவுதலின், 'ஒளித்து நீங்க' என்றார். ஆம்புடை: பிள்ளையார் [சீவகன்] பிழைப்பதொரு கூறுபாடு.

( 203 )
233 காதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப் பட்ட
நீதிமேற் சேற றேற்றாய் நெறியலா நெறியைச் சோ்ந்து
கோதியல் காம மென்னும் மதுவினிற் குளித்த ஞான்றே
யோதிய பொறியற் றாயோ ரரும்பொறி புனைவி யென்றான்.

   (இ - ள்.) வேல்மன்னர் காதித் தங்கள் கண்என வைக்கப்பட்ட நீதிமேல் சேறல் தேற்றாய் - வேலேந்திய வேந்தர்கள் ஊனாகிய கண்ணைக் கண்ணென்பாருடனே பொருது, தங்கள் கண்ணென்று துணிந்து வைத்த நெறியிற் செல்லாயாய்; நெறி அலா நெறியைச் சேர்ந்து - தீய நெறியிலே சென்று; கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே - குற்றம் பொருந்திய காமம் என்கிற கள்ளில் அழுந்தின அப்போதே; ஓதிய பொறி அற்றாய் - கூறிய நல்வினையை இழந்தாய்; ஓர் அரும்பொறி புனைவி என்றான் - (ஆதலால்,) இனி ஒரு நல்ல பொறியொன்றைப் புனைந்திடுக என்று [அறிவெனும் அமைச்சன்] கூறினான்.

 

   (வி - ம்.) இவ்விரண்டு செய்யுளும் தேவிக்கும் அவள் கருவிற்கும் உய்தியை அளிக்கும் காரணமாக அவர்களின் ஊழ் சச்சந்தன் உள்ளத்தினூடே தூண்டி எழுப்பிய அவனுடைய நினைவுகள். இவற்றை ஆசிரியர் அவன் அறிவினை அமைச்சனாக உருவகித்துக் கூறும் அழகு ஆற்றவும் இனிது.

( 204 )

1. தமியனாக - அரச வுரிமையை நீங்க. ஓம்படை ஒன்றும் செப்பாள் - தான் பரிகாரம் சிறிதும் கூறாளாய்.