| மண்மகள் இலம்பகம் |
1270 |
|
|
|
இறுப்ப அரசர்களிற் சிறந்த கலிங்க மன்னனின் தலைமீது தாக்க; மன்னன் பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான் - அவன் பொன்னாலாகிய குழையும் பூணும் முத்துமாலையும் ஒளிரப் (படை நடுவே)) வீழ்கின்றவன்; மின் அவிர் பருதி கோளொடு முந்நீர் வீழ்வது ஒத்தான் - ஒளி வீசும் ஞாயிறு கோளுடனே கடலில் வீழ்வதனைப் போன்றான்.
|
|
(வி - ம்.) கோளிற்குக் குழை முதலியன உவமை.
|
( 150 ) |
| 2252 |
கொடுஞ்சிலை யுழவன மான்றோ்க் | |
கோவிந்த னென்னுஞ் சிங்க | |
மடங்கருஞ் சீற்றத் துப்பின் | |
மாரட்ட னென்னும் பொற்குன் | |
றிடத்துபொற் றூளி பொங்கக் | |
களிற்றொடு மிறங்கி வீழ | |
வடர்ந்தெரி பொன்செ யம்பி | |
னழன்றிடித் திட்ட தன்றே. | |
|
|
(இ - ள்.) கொடுஞ்சிலை உழவன் மான்தேர்க் கோவிந்தன் என்னும் சிங்கம் - கொடிய வில்லேந்திய உழவனும் குதிரை பூட்டிய தேரை யுடையவனுமான கோவிந்தன் என்னும் சிங்கம்; மடங்க அருஞ் சீற்றத் துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று - வளைதற் கரிய சீற்றத்தையும் வலிமையையுமுடைய மாரட்டன் என்ற பொன்மலையை; பொன் தூளி பொங்க இடந்து - பொற்றுகள் எழ மார்பைப் பிளந்து; களிற்றொடும் இறங்கி வீழ - யானையுடன் தாழ்ந்து வீழ; அடர்ந்து எரி பொன் செய் அம்பின் - நெருங்கி எரிகின்ற பொன்னாற் செய்த அம்பினாலே; அழன்று இடித்திட்டது - சினந்து இடித்தது.
|
|
(வி - ம்.) சிங்கமும் மலையும் என்றற் கேற்ப, 'இடித்திட்டது' என்றார்.
|
( 151 ) |
| 2253 |
கோங்குபூத் துதிர்ந்த குன்றிற் | |
பொன்னணி புளகம் வேய்ந்த | |
பாங்கமை பரும யானைப் | |
பல்லவ தேச மன்னன் | |
றேங்கமழ் தெரியற் றீம்பூந் | |
தாரவ னூர்ந்த வேழங் | |
காம்பிலிக் கிறைவ னூர்ந்த | |
களிற்றொடு மலைந்த தன்றே. | |
|