பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1271 

   (இ - ள்.) கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் - கோங்கு மலர்ந்து உதிர்ந்து கிடந்த குன்று போல; பொன் அணி புளகம் வேய்ந்த - பொன்னாற் செய்த கண்ணாடி தைத்தணிந்த; பாங்கு அமை பரும யானை பல்லவ தேச மன்னன் - உறவமைந்த பரும யானையையுடைய பல்லவ நாட்டரசன்; தேன் கமழ் தெரியல் தீம் பூந்தாரவன் ஊர்ந்த வேழம் - தேன் மணக்கின்ற தெரிதலையுடைய இனிய மலர்மாலை யானாகிய உலோகபாலன் ஏறிய யானை; காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது - காம்பிலி வேந்தன் ஏறிய யானையுடன் பொருதது.

   (வி - ம்.) கோங்கு - கோங்கமரம். புளகத்திற்குக் கோங்குமலர் உவமை. புளகம் - கண்ணாடி. பூந்தாரவன் என்றது, உலோகபாலனை காம்பிலி - ஒருநாடு.

( 152 )
2254 கொந்தழல் பிறப்பத் தாக்கிக்
  கோடுகண் மிடைந்த தீயால்
வெந்தன விலையி லாத
  சாமரை வீர மன்ன
னந்தரம் புதைய வில்வா
  யருஞ்சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய
  கூற்றென முழங்கி னானே.

   (இ - ள்.) கோடுகள் கொந்து அழல் பிறப்பத் தாக்கி மிடைந்த தீயால் - (அப்போது அவற்றின்) கொம்புகள் பொங்கும் அழல் உண்டாகத் தாக்க எழுந்த நெருப்பினால்; விலையிலாத சாமரை வெந்தன - விலைமதிக்க இயலாத சாமரைகள் எரிந்தன; வீர மன்னன் அந்தரம் புதைய வி்ல்வாய் அருஞ்சரம் பெய்த மாரி - அப்போது உலோகபாலன் வானம் மறையுமாறு வில்லிடத்தே அரிய கணைகளைப் பெய்த மழையை; குந்தத்தால் விலக்கி - காம்பிலி மன்னன் தன் குந்த மென்னும் படையாலே தடுத்து; வெய்ய கூற்றென முழங்கினான் - கொடிய எமனைப் போல ஆரவரித்தான்.

   (வி - ம்.) தாக்கி - தாக்க : எச்சத் திரிபு.

   மன்னன் : உலோகபாலன். அந்தரம் - வானவெளி. வில்வாயினின்றும் பெய்த சரமாரி என்க. குந்தம் - ஒரு படைக்கலன்.

( 153 )
2255 மற்றவ னுலோக பாலன்
  வயங்குபொற் பட்ட மார்ந்த
நெற்றிமே லெய்த கோலைப்
  பறித்திட வுமிழ்ந்த நெய்த்தோ