பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1272 

2255 ருற்றவன் களிற்றிற் பாயத்
  தோன்றுவா னுதயத் துச்சி
யொற்றைமாக் கதிரை நீட்டி
  யொண்சுட ரிகுந்த தொத்தான்.

   (இ - ள்.) உலோக பாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த நெற்றிமேல் - உலோக பாலனுடைய விளங்கும் பொற்பட்டம் பொருந்திய நெற்றியிலே; அவன் எய்த கோலை - காம்பிலி மன்னன் விடுத்த கணையை; பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர் - உலோகபாலன் பறித்தவுன் அந்த நெற்றி உமிழ்ந்த குருதி; உற்று அவன் களிற்றில் பாயத்தோன்றுவான் - வந்து அவனூர்ந்த யானையின்மேற் பாய்ந்திடக் காணப்படும் உலோகபாலன்; உதயத்து உச்சி ஒண்சுடர் ஒற்றை மாக்கதிரை நீட்டி இருந்தது ஒத்தான் - உதயமலையின் உச்சியிலே ஒளி பொருந்திய ஞாயிறு தன் ஒற்றைக் கதிரை நீட்டி இருந்ததைப் போன்றான்.

   (வி - ம்.) உலோக பாலனுக்குக் கூறியதைக் காம்பிலி மன்னனுக்கு ஏற்றுவாரும் உளர்மற்று : அசை. அவன் : காம்பிலிமன்னன் - நெய்த்தோர் பாயத்தோன்றுபவன் சுடரை ஒத்தான். நெய்த்தோர் கதிர்க்கும், யானை உதயகிரிக்கும் ஞாயிறு மன்னனுக்கும் உவமை.

( 154 )
2256 கொடுமரங் குழைய வாங்கிக்
  கொற்றவ னெய்த கோல்க
ணெடுமொழி மகளிர் கோல
  நிழன்மணி முலைக ணோ்பட்
டுடனுழ வுவந்த மார்ப
  மூழ்கலிற் சிங்கம் போலக்
கடன்மருள் சேனை சிந்தக்
  காம்பிலி மன்னன் வீழ்ந்தான்.

   (இ - ள்.) கொற்றவன் கொடுமரம் குழைய வாங்கி எய்த கோல்கள் - (அப்பொழுது) உலோகபாலன் தன் வில்லைக் குழைய வளைத்து விடுத்த அம்புகள்; நெடுமொழி மகளிர் கோலம் நிழல் மணி முலைகள் நேர்பட்டு - தம் கற்பின் மிகுதியால் வஞ்சினங் கூறுதற்குரிய மகளிரின் ஒப்பனை செய்த ஒளிவிடும் மணிகளைப் புனைந்த முலைகள் எதிர்ந்து; உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலின் - சேர உழுதலின் மகிழ்ந்த அவன் மார்பிலே மூழ்கியதால்; கடல் மருள் சேனை சிந்த - கடலனைய தன் படை சிதறியோடும்படி; சிங்கம்போலக் காம்பிலி மன்னன் பட்டான் - சிங்கத்தைப் போலக் காம்பிலி வேந்தன் இறந்தான்.