| மண்மகள் இலம்பகம் |
1273 |
|
|
|
(வி - ம்.) உலோகபாலனாற் காம்பிலி மன்னன் இறந்தான்.
|
|
கொடுமரம் - வில். வாங்கி - வளைத்து. கொற்றவன் ; உலோகபாலன். நெடுமொழிமகளிர் - தங்கற்பின் மிகுதியால் வஞ்சினம் கூறுதற்குரிய மகளிர். மருள் : உவமஉருபு. மன்னர் சிங்கம் போல வீழ்ந்தான் என்க.
|
( 155 ) |
| 2257 |
பொன்னிறக் கோங்கம் பொற்பூங் | |
குன்றெனப் பொலிந்த மேனி | |
நன்னிற மாலின் மேலா | |
நலங்கொடார் நபுல னென்பான் | |
மின்னிற வெஃக மேந்தி | |
வீங்குநீர் மகதை யார்கோன் | |
கொன்னிறக் களிற்றி னெற்றிக் | |
கூந்தன்மாப் பாய்வித் தானே. | |
|
|
(இ - ள்.) பொன்நிறக் கோங்கம் பொன் பூங்குன்று என - பொன் நிறக் கோங்கமும் பொலிவினையுடைய மலர்க் குன்றமும் போல; பொலிந்த மேனி - பொலிவுற்ற மெய்யினையுடையவனும்; நன்னிற மாவின் மேலோன் - நல்ல நிறமுடைய குதிரை மேலுள்ளவனுமாகிய; நலங் கொள் தார் நபுலன் என்பான் - அழகிய தாரணிந்த நபுலன் என்பவன்; மின்நிற எஃகம் ஏந்தி - ஒளி வீசும் வாளை ஏந்தி; வீங்கு நீர் மகதையார் கோன் - நீர்வளமுடைய மகதநாட்டு மன்னனின்; கொன் நிறக் களிற்றின் நெற்றி - அச்சுறுத்தும் தோற்றமுடைய களிற்றின் உச்சியிலே; கூந்தல் மா பாய்வித்தான் - அப் புரவியைப் பாயவிட்டான்.
|
|
(வி - ம்.) நபுலன் : சீவகன் தம்பி.
|
|
பொன்னிறப் பூங்கோங்கம், பொற்குன்றம் என இயைக்க. நலங்கொள்தார் - ஈண்டுத் தும்பைத்தார் என்க. எஃகம் - வாள். மகதை - மகதநாடு, கூந்தன்மா - குதிரை. அக் கூந்தன்மாவை என்க.
|
( 156 ) |
| 2258 |
ஏந்தறன் கண்கள் வெய்ய | |
விமைத்திட வெறித லோம்பி | |
நாந்தக வுழவ னாணி | |
நக்குநீ யஞ்சல் கண்டாய் | |
காய்ந்திலே னென்று வல்லே | |
கலினமாக் குன்றிற் பொங்கிப் | |
பாய்ந்ததோர் புலியின் மற்றோர் | |
பகட்டின்மேற் பாய்வித் தானே. | |
|