| மண்மகள் இலம்பகம் |
1274 |
|
|
|
(இ - ள்.) ஏந்தல்தன் கண்கள் வெய்ய இமைத்திட - (அப்போது) அம் மகத மன்னனின் கண்கள் விரைய இமைத்தலால்; நாந்தக உழவன் நாணி - வாளுழவனாகிய நபுலன் நாண முற்று; எறிதல் ஓம்பி - வாளெறிதலை நிறுத்தி; நக்கு - நகைத்து; காய்ந்திலேன் - நான் உன்னைத் துன்புறுத்தேன்; நீ அஞ்சல் என்று - நீ அஞ்சற்க என்றுரைத்து; குன்றின் பொங்கிப் பாய்ந்ததோர் புலியின் - ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றுக்குப் பொங்கிப் பாய்ந்த புலி போல; மற்றோர் பகட்டின்மேல் - அக் களிற்றினின்றும் வேறொரு களிற்றின்மேல்; கலினமாப் பாய்வித்தான் - கடிவாளம் பூண்ட குதிரையைப் பாய்வித்தான்.
|
|
(வி - ம்.) 'வெய்ய இமைத்திட' என்னுந் தொடரிலுள்ள 'வெய்ய என்பதை, மற்றோர் வெய்ய பகட்டின்மேல்' என இயைப்பர் நச்சினார்க்கினியர். நாந்தகம் - வாள். பகடு - யானை. ”விழித்தகண் வேல்கொண்டெறிய வழிந்திமைப்பின், ஓட்டன்றோ வன்கணவர்க்கு” என்னும் திருக்குறள் இயைபு காண்க.
|
( 157 ) |
| 2259 |
கைப்படை யொன்று மின்றிக் | |
கைகொட்டிக் குமர னார்ப்ப | |
மெய்ப்படை வீழ்ந்த நாணி | |
வேழமு மெறிதல் செல்லான் | |
மைப்பட நெடுங்கண் மாலை | |
மகளிர்தம் வனப்பிற சூழ்ந்து | |
கைப்படு பொருளி லாதான் | |
காமம்போற் காளை மீண்டான். | |
|
|
(இ - ள்.) குமரன் கைப்படை ஒன்றும் இன்றிக் கைதட்டி ஆர்ப்ப - (அப்போது அக் களிற்றிலிருந்த) குமரன் கையில் ஒரு படையுமில்லாமையால் மற்போர் செய்யக் கருதிக் கைதட்டி முழங்கலின்; மெய்ப்படை வீழ்த்தல் நாணி - அவன் மெய்யைப் படையால் வீழ்த்தற்கு நாணமுற்று; வேழமும் எறிதல் செல்லான் - யானையையும் வீழ்த்தானாகி; மைப்படு நெடுங்கண் மாலை மகளிர்தம் வனப்பின் சூழ்ந்து - மைதீட்டிய நெடுங்கண்களையும் மாலையையும் உடைய பெண்களின் அழகினாலே அவர்களைக் கூட விரும்பியும்; கைப்படு பொருளிலாதான் காமம்போல் - கையிலே பொருள் இல்லாதவனுடைய ஆசையைப்போல; காளை மீண்டான் - நபுலன் திரும்பினான்.
|
|
(வி - ம்.) 'கைப்படு பொருளிலாதான் காமம்' என்பதற்கு, 'கைப்படு பொருளில்லாதவனிடம் மகளிர் கொண்ட காமம்' என்றும் பொருள் கூறலாம். வறியவன் பரத்தையர் மேற்கொண்ட காமம் என்பது தகுதியுடைய பொருள். மற்போர் - எருமைமறம்.
|
( 158 ) |