| மண்மகள் இலம்பகம் |
1276 |
|
|
|
(வி - ம்.) வீறு - வெற்றி. வேழம் பிறப்பாற் றனக்கு ஒப்பின்மையால் அதனை எறிவது வெற்றி எனப்படாது என்பது கருத்து. ஏறுண்டவர் - பிறரால் எறியப்பட்ட மறவர். மிச்சில் - எஞ்சியது. மாறு - நிகர். ஆறு - அறநெறி. உழவன் : எழுவாய்
|
( 160 ) |
| 2262 |
ஒன்றாயினும் பலவாயினு | |
மோரோச்சினு ளெறிய | |
வென்றாயின மதவேழமு | |
முளவோவென வினவிப் | |
பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப் | |
புனை தார்மிஞி றார்ப்பச் | |
சென்றானிகல் களிறாயிர | |
மிரியச்சின வேலோன். | |
|
|
(இ - ள்.) சின வேலோன் - புகையும் வலந்திய விபுலன்; வென்றாயின் மதவேழமும் - முன்னர்ப் பல போரினும் வென்று எனக்குப் போதுவனவாகிய மதவேழங்களிலும்; ஒன்று ஆயினும் பல ஆயினும் - ஒன்றே யெனினும் பலவே எனினும்; ஓர் ஓச்சினுள் எறிய உளவோ என வினவி - ஒரு வெட்டிலே ஒரு களிறு ஆக வெட்டுதற்கு உளவோ என்று வினவியவாறு; புனை தார் மிஞிறு ஆர்ப்ப - அணிந்த மலர்மாலையிலே வண்டுகள் முரல; இகல் களிறு ஆயிரம் இரிய - வலிய களிறுகள் ஆயிரம் சிதறி யோடுமாறு; பொன் தாழ்வரைப் புலிப்போத்து என - பொன்மலையிலே உலவும் புலியேறுபோல; சென்றான் - யானைமீது உலவினான்.
|
|
(வி - ம்.) முன்னர். 'அயில் வாள் உயரா' (2260) என்று கூறிப் பின்னர். 'அயிலுழவன்' (2261) 'வேலோன்' (2262) என்றது, யானையிலிருந்து பொருமிடத்து வேல் வேண்டும் என்று கருதி.
|
( 161 ) |
| 2263 |
புடைதாழ்குழை பொருவில்லுயர் | |
பொன்னோலையொ டெரிய | |
வுடைநாணொடு கடிவட்டினொ | |
டொளிர்வாளினொ டொருவ | |
னடையாநிக ரெறிநீயென | |
வதுவோவென நக்கான் | |
கிடையாயின னிவனேயெனக் | |
கிளராணழ குடையான். | |
|
|
(இ - ள்.) புடை தாழ் குழை பொரு இல் உயர் பொன் ஓலையொடு எரிய - பக்கத்தே தாழும் குழை ஒப்பற்ற உயர்ந்த பொன் தோடுடன் ஒளிர ; உடை நாணொடு கடி வட்டினொடு
|