| மண்மகள் இலம்பகம் |
1277 |
|
|
|
ஒளிர் வாளினொடு ஒருவன் - அசை நாணும் மிக்க வட்டுடையும் ஒளிரும் வாளும் கொண்ட ஒருவன்; அடையா, நிகர், நீ எறி என - (விபுலனை) நெருங்கி, நீ எனக்கு நிகர், என்னை வெட்டு என்றானாக ; கிடையாயினன் இவனே எனக் கிளர் ஆண் அழகு உடையான் - இவனே உலகிற் கொப்பானவன் என்னுமாறு விளங்கும் ஆணழகுடைய விபுலன்; அதுவோ என நக்கான் - அப்படியோ என்று நகைத்தான்.
|
|
(வி - ம்.) 'முற்படமார்பு கொடுத்தான் என்னும் புகழை நீ எய்தக் கருதியோ இங்ஙனம் உரைத்தாய். அவ்வாறு புகழையடைய ஒவ்வேன்' என்பான், 'அதுவோ?' என நக்கான்.
|
( 162 ) |
| 2264 |
இன்னீரின திரைமேலிரண் | |
டிளவெஞ்சுட ரிகலி | |
மின்னோடவை சுழன்றாயிடை | |
விளையாடுகின் றனபோற் | |
பொன்னாணினர் பொருவில்லியர் | |
புனைகேடகந் திரியாக் | |
கொன்வாளினர் கொழுந்தாரினர் | |
கொடிமார்பினர் திரிந்தார். | |
|
|
(இ - ள்.) இன் நீரின் திரைமேல் - இனிய நீரையுடைய கடலின் அலைகளின் மேலே; இரண்டு இள வெஞ்சுடர் இகலி - இரண்டு இள ஞாயிறுகள் மாறுபட்டு; அவை மின்னோடு சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல் - அவை கையிற் பற்றிய மின்னுடன் சுழன்று ஆங்கே இருந்து விளையாடுகின்றவை போல; பொன் நாணினர் - பொன் நாணினராய், கொன் வாளினர் - அச்சுறுத்தும் வாளினராய், கொழுந்தாரினர் - வளவிய மாலையினராய்; கொடி மார்பினர் - கொடியை எழுதிய மார்பினராய்; பொரு இல் உயர் புனை கேடகம் திரியா - ஒப்பில்லாது உயர்ந்த கேடகத்தைத் திரித்து; திரிந்தார் - (யானைமீது சாரிகையாகத்) திரிந்தார்.
|
|
(வி - ம்.) மின் : வாளுக்குவமை.
|
|
காட்சிக்கினிய நீரையுடைய கடல் என்க. இரண்டிளவெஞ்சுடர் : இல்பொருளுவமை. மின் - படைக்கலனுக்குவமை. கொள் - அச்சம். கொடி - எழுதிய கொடி.
|
( 163 ) |
| 2265 |
விருந்தாயினை யெறிநீயென | |
விரைமார்பகங் கொடுத்தாற் | |
கரும்பூணற வெறிந்தாங்கவ | |
னினதூழினி யெனவே | |
|