பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1278 

2265 யெரிந்தாரயி லிடைபோழ்ந்தமை
  யுணராதவ னின்றான்
சொரிந்தார்மல ரரமங்கையர்
  தொழுதார்விசும் படைந்தான்.

   (இ - ள்.) நீ விருந்து ஆயினை என (அவ்வாறு யானையின் மேலிருந்து சாரிகை திரிதலில் சேர்ந்து வெட்டுதல் கூடாமையின் இருவரும் வேற்போர் செய்யத் துணிந்தனர். துணிந்த பின்னர்) யான் வந்தபின் வந்தமையின் நீ எனக்கு விருந்தினன் ஆயினை என்று கூறி; விர மார்பகம் கொடுத்தாற்கு - விபுலன் மணங்கமழும் தன் மார்பைக் கொடுத்தானாக அங்ஙனம் கொடுத்தவனை; அவன் அரும்பூண் அற எறிந்து இனி நினது ஊழ் என - அம்மறவனும் அரிய கவசத்தளவு அறும்படி எறிந்து இனி எறிவது நின்னுடை முறை என்று கூறினன்; எரிந்து ஆர் அயில் இடை போழந்தமை உணராது விசும்பு அடைந்தான் - விபுலன் ஒளிர்ந்து இலக்கணம் நிரம்பிய வேல் தன் மார்பை ஊடுருவிச் சென்றமையை அதன் நொய்மையாலே உணரமாட்டாது வானுலகத்தை அடைந்தான்; அவன் ஆங்கு நின்றான் - அம்மறவன் அங்கே நின்றான், அரமங்கையர் மலர் சொரிந்தார் தொழுதார் - வானவர் மகளிர் அவ்வீரன் அடிகளிலே மலரைச் சொரிந்து கைகூப்பித் தொழுதனர்.

   (வி - ம்.) ”விண்ணுலகை விரும்பிய விபுலன் ஈண்டு நிற்க, நல் வினையால் அவன் விண்ணுலகிலே நின்றான் என்று தேவர் கூறினார். அவன் ஆங்கு நின்றான் என்க. நிலைபெற்றிருந்த நிலையை அவன் அங்கே நின்றானென்றல் உலகவழக்கு. (செய்யுள் வழக்கினுங்கூட) கன்னின்றான் எந்தை எனவரும். இனி அடைந்தார் என்ற பாடத்திற்கு 'இருவரும் அடைந்தார்' என்பார்க்கு, அவனின்றான் என்பதனை யானை மேனின்றான் என்றல் மரபன்மையின், காலாளாய் இருவரும் நின்றார் எனல் வேண்டும் : அது முற்கூறிய உவமங்கட்குப் பொருந்தாதாம். அயிலை வாளாக்குதல் பொருத்தமின்று. இத்துணையும் விபுலன் பொருதபடி கூறினார்.” இஃது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கம்.

( 164 )

வேறு

2266 நித்திலக் குப்பை போல
  நிழலுமிழ்ந் திலங்கு மேனிப்
பத்திப்பூ ணணிந்த மார்பிற்
  பதுமுகன் பைம்பொற் சூழி
மொய்த்தெறி யோடை நெற்றி
  மும்மதக் களிற்றின் மேலான்
கைத்தலத் தெஃக மேந்திக்
  காமுகற் கண்டு காய்ந்தான்.