| மண்மகள் இலம்பகம் |
1279 |
|
|
|
(இ - ள்.) மார்பின் அணிந்த பத்திப்பூண் - மார்பில் அணிந்த பத்திகளையுடைய முத்துப் பூண்களாலே; நித்திலக் குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனி - முத்துத் திரள்போலே ஒளி வீசி விளங்கும் மேனியையுடைய; பதுமுகன் - பதுமுகன் என்பவன்; பைம்பொன் சூழி மொய்த்து எறி ஓடை நெற்றி - பசும் பொன்னாலாகிய முகபடாத்தையும் செறிந்த ஒளியை வீசும் பட்டம் அணிந்த நெற்றியையும் உடைய; மும்மதக் களிற்றின் மேலான் - மும்மதமும் பொழியும் களிற்றின் மேல் ஏறியவனாகி; கைத்தலத்து எஃகம் ஏந்தி - கையிலே வேலை ஏந்தி காமுகற் கண்டு காய்ந்தான் - காமுகனைப் பார்த்துச் சீறினான்.
|
|
(வி - ம்.) நித்திலக்குப்பை - முத்துக்குவியல். சூழி - முகபடாம். எஃகம் - வேல். காமுகன் - கட்டியங்காரன். படைஞருள் ஒருவன்.
|
( 165 ) |
| 2267 |
மாற்றவன் சேனை தாக்கித் | |
தளர்ந்தபின் வன்கண் மள்ள | |
ராற்றலொ டாண்மை தோன்ற | |
வாருயிர் வழங்கி வீழ்ந்தார் | |
காற்றினாற் புடைக்கப் பட்டுக் | |
கடலுடைந் தோடக் காம | |
ரேற்றிளஞ் சுறாக்க ளெங்குங் | |
கிடந்தவை போல வொத்தார். | |
|
|
(இ - ள்.) மாற்றவன் சேனை தாக்கி - (அப்போது) காமுகன் சேனை வந்து தாக்கியதால்; தளர்ந்தபின் - பதுமுகன் படை சோர்வுற்றபின்; வன்கண் மள்ளர் - சோர்வின்றி நின்ற வீரர்கள்; ஆற்றலோடு ஆண்மை தோன்ற - வலிமையும் வீரமும் விளங்க; ஆர் உயிர் வழங்கி வீழ்ந்தார் - சிறந்த உயிரைக் கொடுத்து வீழ்ந்தவர்கள்; காற்றினால் புடைக்கப் பட்டுக் கடலுடைந்தோட - காற்றாலே தாக்கப் பெற்றுக் கடல் உடைந்து போக; ஏறு இளஞ்சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார் ஏறாகிய சுறாமீன்கள் நிலமெங்கும் கிடந்தவற்றைப் போன்றனர்.
|
|
(வி - ம்.) காற்றுக் காமுகன் படைக்கும். கடல் பதுமுகன் படைக்கும் உவமை. போல, ஒத்தார் என்ற இரண்டும் உவம உருபாதலின் போல என்பதனை, 'ஏறாகிய சுறாக்கள் போல வலியும் ஆண்மையும் தோன்ற நின்றுபொருது பட்டுக் கிடந்தவர்கள், பெருங்காற்றாற் கடலுடைந்து போக அச்சுறாக்கள் நிலமெங்கும் கிடந்தவற்றை ஒத்தார்கள் என முன்னே கூட்டி இருமுறை உவமையாக்குவர் நச்சினார்க்கினியர்.
|
( 166 ) |