பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1281 

   (வி - ம்.) பிண்டிபாலம் : தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை. ஆகையால் மயிலோடுவமித்தார். காமுகன் தன் யானைமீது பாய்தலின் வாளாலே வெட்டினான். இன்றேல், யானைமீதிருந்து பொருமிருவர் வாளாற் பொர இயலாது.

( 168 )
2270 தீமுகத் துமிழும் வேற்கட்
  சில்லரிச் சிலம்பி னார்தங்
காமுகன் களத்து வீழக்
  கைவிர னுதியிற் சுட்டிப்
பூமுக மாலை மார்பன்
  பொன்னணி கவச மின்னக்
கோமுகன் கொலைவல் யானை
  கூற்றெனக் கடாயி னானே.

   (இ - ள்.) தீமுகத்து உமிழும் வேல்கண் - தீயைத் தன்னிடமிருந்து சொரியும் வேலனைய கண்களையுடைய; சில்அரிச் சிலம்பினார் - சிலவாகிய பரல்களையுடைய சிலம்பணிந்த மங்கையருக்குரிய; காமுகன் களத்து வீழ - காமுகன் போர்க்களத்திலே பட்டவுடன்; பூமுக மாலை மார்பன் கோமுகன் - (அவன் தம்பி) மலர் போன்ற முகச் செவ்வியையுடைய, மாலையணிந்த மார்பனாகிய கோமுகன்; பொன் அணி கவசம் மின்ன - பொன்னாலாகிய அழகிய கவசம் ஒளிர ; கைவிரல் நுதியின் சுட்டி - என் தமையனைக் கொன்றவன் இவனென்று கைவிரல் நுனியாற் சுட்டிக் காட்டிய வண்ணம்; கொலைவல் யானை கூற்றெனக் கடாயினான் - கொலையில் வல்ல யானையைக் கூற்றுவனைப் போலச் செலுத்தினான்.

   (வி - ம்.) காமுகன் என்னும் பெயர்க்கேற்பச் சிலம்பினார்தங் காமுகன் என அடைபுணர்த்தார் பூமுகன் என்றது, போர்கிட்டிய தென்று மகிழ்ந்த அவன் செவ்வியை உணர்த்தி நின்றது.

( 169 )
2271 சாரிகை திரியும் யானை
  யுழக்கலிற் றரணி தன்மே
லார்கலிக் குருதி வெள்ள
  மருந்துகள் கழுமி யெங்கும்
வீரியக் காற்றிற் பொங்கி
  விசும்புபோர்த் தெழுதப் பட்ட
போர்நிலைக் களத்தை யொப்பக்
  குருதிவான் போர்த்த தன்றே.

   (இ - ள்.) சாரிகை திரியும் யானை உழக்கலின் - (அவ்வாறு கோமுகனால் உந்தப்பட்டு) சாரிகையிலே திரிகின்ற யானை