பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1282 

கலக்குதலாலே; ஆர்கலிக் குருதி வெள்ளம் - கடல்போலுங் குருதிப் பெருக்கு; தரணி தன்மேல்அருந்துகள் கழுமி - நிலவுலகிலே அரிய செந்துகளாய்ப் பொருந்தி; எங்கும் வீரியக் காற்றில் பொங்கி - எங்கணும் பெருங்காற்றாலே பொங்கி; விசும்பு போர்த்தது - வானை மூட; எழுதப்பட்ட போர்நிலைக் களத்தை ஒப்ப - எழுதப்பெற்ற போர்க்களத்தைப் போல; குருதி வான் போர்த்தது - செக்கர்வான் போர்த்தது.

   (வி - ம்.) 'எழுதப்பட்ட போர்நிலைக் களத்தை ஒப்பர் சாரிகை திரியும் யானை' என இயைத்து, யானைகள் என எல்லா யானைகட்கும் ஆக்குவர் நச்சினார்க்கினியர்.

( 170 )
2272 சென்றது தடக்கை தூணி
  சேந்தகண் புருவங் கோலி
நின்றவிற் குனிந்த தம்பு
  நிமிர்ந்தன நீங்கிற் றாவி
வென்றிகொள் சரங்கண் மூழ்கி
  மெய்ம்மறைத் திட்டு மின்றோய்
குன்றின்மேற் பவழம் போலக்
  கோமுகன் றோன்றி னானே.

   (இ - ள்.) தடக்கை தூணி சென்றது - (அது கண்ட பதுமுகனுடைய) கை தூணியிலே சென்றது; கண் சேந்த - கண்கள் சிவந்தன; புருவம் கோலி நின்ற - புருவங்கள் வளைந்தே நின்றன; வில் குனிந்தது - வில் வளைந்தே யிருந்தது; அம்பு நிமிர்ந்தன - அம்புகள் நேரே சென்றன; ஆவி நீங்கிற்று - எதிரே நின்ற படைகளின் உயிர் பிரிந்தது; வென்றி கொள்சரங்கள் மூழ்கி - வென்றியையுடைய அம்புகள் அழுந்தி; மெய்ம்மறைத் திட்டு - உடம்பை மறைத்துச் (சில உருவிப்போயதால்); மின்தோய் குன்றின்மேல் பவழம்போலக் கோமுகன் தோன்றினான் - மின் பொருந்திய குன்றின்மேல் பவழம்போலக் கொமுகன் தோன்றினான்.

   (வி - ம்.) தடக்கை தூணிசென்றது என மாறுக. தூணி-அம்பறாத் தூணி. கண்சேந்த என்க. சேந்த : பலவறிசொல். நின்ற-நின்றன. நீங்கிற்று : சாதியொருமை. மறைத்திட்டு; ஒருசொல். மலையானைக்கும் பவழம் கோமுகனுக்கும் உவமை.

( 171 )
2273 பனிவரை முளைத்த கோலப்
  பருப்புடைப் பவழம் போலக்
குனிமருப் புதிரந் தோய்ந்த
  குஞ்சரங் கொள்ள வுந்திக்