பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1283 

2273 கனிபடு கிளவி யார்தங்
  கதிர்முலை பொருது சேந்த
துனிவரை மார்பன் சீறிச்
  சுடுசரஞ் சிதறி னானே.

   (இ - ள்.) கனிபடு கிளவியார்தம் கதிர்முலை பொருது சேந்த - கனியனைய மொழியாராகிய மகளிரின் கதிர்த்த முலைகள் தாக்குதலாற் சிவந்த; வரை துனி மார்பன் - மலையை வெறுக்கும் மார்பனாகிய கோமுகன்; சீறி - சினந்து ; பனிவரை முளைத்த கோலப் பருப்பு உடைய பவழம்போல-பனிமலையிலே தோன்றிய அழகிய பருத்த பவழம்போல; குனிமருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் - வளைந்த கொம்பிடத்தே குருதி தோயப்பட்ட குஞ்சரத்தை; கொள்ள உந்தி - போர் கொள்ளச் செலுத்தி; சுடுசரம் சிதறினான் - சுடுகணைகளைச் சிதறினான்.

   (வி - ம்.) பவழம் : உதிரத்தோய்ந்த மருப்பிற்குவமை. பருப்பு - பருமை. கொள்ள - போர்த்தொழிலை மேற்கொள்ளும்படி என்க. கனி - கற்பகக்கனி என்க. வரை துனி மார்பன் என்க. சரம் - அம்பு.

( 172 )
2274 பன்னலம் பஞ்சிக் குன்றம்
  படரெரி முகந்த தொப்பத்
தன்னிரு கையி னாலுந்
  தடக்கைமால் யானை யாலு
மின்னுயிர் பருகிச் சேனை
  யெடுத்துக்கொண் டிரிய வோட்டிக்
கொன்முரண் டோன்ற வெம்பிக்
  கொலைக்களிற் றுழவ னார்த்தான்.

   (இ - ள்.) பன்னல் அம் பஞ்சிக் குன்றம் - எஃகுதலை யுடைய பஞ்சியாகிய மலையை; படர்எரி முகந்தது ஒப்ப - பரவிய எரி பற்றியதைப் போல; தன் இரு கையினாலும் - தன்னுடைய இரண்டு கைகளினாலும்; தடக்கை மால் யானையாலும் - துதிக்கையையுடைய யானையாலும்; சேனை எடுத்துக்கொண்டு இரிய ஒட்டி - (பதுமுகன்) தானை விசையெடுத்து ஓடும்படி ஓட்டி; இன் உயிர் பருகி - போகாதவர் உயிரைப் பருகி; கொன்முரண் தோன்ற - பெரிய வலிமை தோன்ற; வெம்பி - சினந்து; கொலைக் களிற்று உழவன் ஆர்த்தான் - கொல்யானையின்மேல் வந்த கோமுகன் ஆரவாரித்தான்.

   (வி - ம்.) இதனைப் பதுமுகன்மேல் ஏற்றுவாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர்.