| மண்மகள் இலம்பகம் |
1284 |
|
|
|
பன்னல் : ஒரு தொழில். இதனை எஃகுதல் என்பர் நச்சினார்க்கினியர். சுகிர்தல் என்றும் கூறுப. பஞ்சி-பஞ்சு. படர்எரி : வினைத்தொகை. மால் - பெரிய. விசை யெடுத்துக் கொண்டென்க. கொன் - பெருமை. முரண்-வலிமை, உழவன் : கோமுகன்.
|
( 173 ) |
| 2275 |
தருக்கொடு குமர னார்ப்பத் | |
தன்சிலை வளைய வாங்கி | |
யொருக்கவன் கையும் வாயு | |
முளங்கிழித் துடுவந் தோன்றச் | |
சுருக்குக்கொண் டிட்ட வண்ணந் | |
தோன்றலெய் திடுத லோடு | |
மருப்பிறக் களிறு குத்தி | |
வயிரந்தான் கழிந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) குமரன் தருக்கொடு ஆர்ப்ப - (அவ்வாறு பொருத) களிப்புடன் கோமுகன் சங்கை வாயிலே வைத்து ஆர்த்தானாக; தன்சிலை வளைய வாங்கி - (அது பொறாமல்) தன் வில்லை மிகவும் வளைத்து; அவன் கையும் வாயும் உளம் ஒருக்குக் கிழித்து - அவனுடைய கையையும் வாயையும் உள்ளத்தையும் ஒருங்கே பிளந்து; உடுவம் போன்ற - ஈர்க்குத் தோன்றும்படி; சுருக்குக் கொண்டிட்ட வண்ணம் - சுருக்குக் கோத்தாற்போல; தோன்றல் எய்திடலோடும் - பதுமுகன் பல அம்புகளையும் விடுத்த அளவிலே; களிறு மருப்பு இறக் குத்தி - (கோமுகன்) களிறு தன் மருப்பு ஒடியும்படி பதுமுகன் களிற்றைக் குத்தியதால்; வயிரந் தான் கழிந்தது - அதன் கொள்கை போயிற்று.
|
|
(வி - ம்.) வயிரத்தால் இழைத்த கோளகை ஆகுபெயர்.
|
|
தருக்கு - செருக்கு. குமரன் : கோமுகன். எதுகை நோக்கி ஒருங்கு, ஒருக்கென வலித்து நின்றது. உடுவம் - ஈர்க்கு. தோன்றல் : பதுமுகன். தான் : அசை.
|
( 174 ) |
| 2276 |
நித்தில மணிவண் டென்னு | |
நெடுமதக் களிறு பாய | |
முத்துடை மருப்பு வல்லே | |
யுடைந்துமுத் தொழுகு குன்றின் | |
மத்தக யானை வீழ்ந்து | |
வயிரங்கொண் டொழிந்த தாங்குப் | |
பத்திரக் கடிப்பு மின்னப் | |
பதுமுகன் பகடு போர்த்தான். | |
|
|
(இ - ள்.) நித்தில மணி வண்டு என்னும் நெடுமதக் களிறு பாய - (பதுமுகனுடைய) நித்தில மணிவண்டு என்னும் பெரிய
|