பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1288 

   (இ - ள்.) ஊன் அமர் குறடு போல - இறைச்சி கொத்தும் பட்டடை மரம்போல; இரும்பு உண்டு மிகுத்த மார்பின் - இரும்பு மேய்ந்து மிகுத்து வைத்த மார்பிலே; தேன் அமர் மாலை தாழ - தேன் பொருந்திய மாலை தாழ குலாய்சிலை குனிந்தது - மெய் வளைதலாலே வில் குனிந்தே நின்றது; ஆங்கண் - அப்போது ; மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள் - மானனையை பார்வையினரும் இளைஞரும் கலந்த காமப் போரிலே; காமன் எய்த கான் அமர் கணை எனச் சிதறினான் - காமன் விடுத்த மணம் நிறைந்த மலர்க்கணை போலக் கணைகளைச் சிதறினான்.

   (வி - ம்.) காமன் ஒருவனாக நின்று பலரையும் எய்தலின் உவமம்.

( 180 )
2282 வண்டலை மாலை தாழ
  மதுவுண்டு களித்து வண்கைப்
புண்டலை வேலை யேந்திப்
  போர்க்களங் குறுகி வாழ்த்திக்
கண்படு காறு மெந்தை
  கட்டியங் கார னென்றே
யுண்டொலை யார்க வேலென்
  றுறுவலி தாக்கி னானே.

   (இ - ள்.) மது உண்டு களித்து வண்டு அலை மாலை தாழ - தேனைப் பருகி மகிழ்ந்து வண்டுகள் அலையும் மாலைதாழ; வண்கைப் புண்தலை வேலை ஏந்தி - வளவிய கையிலே (வில்லை நீக்கி) ஊன் பொருந்திய வேலை ஏந்தி; போர்க்களம் குறுகி - போர்க்களத்தை அடைந்து; எந்தை கட்டியங்காரன் கண்படு காறும் வாழ்க என்று - எந்தையாகிய கட்டியங்காரன் உலகெலாந் துஞ்சும் ஊழியளவும் வாழ்க என்று வாழ்த்தி; வேல் ஒலை உண்டு ஆர்க என்று - இவ்வேல் உயிர்களைக் கடுகவுண்டு வயிறு நிறைவதாக என்று கூறி; உறுவலி தாக்கினான் - மிகுவலியுடைய அப் பூரணசேனன் பொருதான்.

   (வி - ம்.) 'களித்த' என்பது பாடமாயின் அகரத்தைச் சுட்டாக்கிக்கொண்டு 'அவ்வுறுவலி என்க' என்பர் நச்சினார்க்கினியர். பெயரெச்சமாக்குதலே அமைவுடைத்து. ஒல்லை, விரைவு; இஃது ஒலை என இடை குறைந்து நின்றது.

( 181 )
2283 கூற்றென வேழம் வீழாக்
  கொடிநெடுந் தோ்க ணூறா
வேற்றவர் தம்மைச் சீறா
  வேந்திர நூழில் செய்யா