பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1290 

   என்னாம் என்றவாறு. இது தன்னைக் கண்டஞ்சிய மறவர்க்குக் கூறிய தென்க.

( 183 )
2285 முடிச்சடை முனிவ னன்று
  வேள்வியிற் கொண்ட வேற்கண்
மடத்தகை மகளிர் கோல
  வருமுலை யுழக்கச் சேந்து
கொடிப்பல வணிந்த மார்பிற்
  கோவிந்தன் வாழ்க வென்று
நடத்துவா னவனை நோக்கி
  நகாச்சிலை பாரித் தானே.

   (இ - ள்.) முடிச்சடை முனிவன் அன்று வேள்வியில் கொண்ட வேல் - சடை முடியுடைய வீரபத்திரன் அக் காலத்துத் தக்கன் வேள்வியிலே ஏந்திய வேலைப் போன்ற; கண் மடத்தகை மகளிர் - கண்களையுடைய இளமையும் அழகுடைய மாதர்களின்; வருமுலை உழக்கச் சேந்து - வளரும் முலைகள் உழக்குதலாற் சிவந்து; கொடிப் பல அணிந்த மார்பின் - பல கொடிகளை அணிதற்குக் காரணமான மார்பினையுடைய; கோவிந்தன் வாழ்க என்று - கோவிந்தன் வாழ்வானாக என்று கூறி; நடத்துவான் - போரைச் செய்யும் சிங்கநாதன்; அவனை நோக்கி நகா - அப்பூரணசேனனைப் பார்த்து நகைத்து; சிலை பாரித்தான் - வில்லை வளைத்தான்.

   (வி - ம்.) இறைவன் தன்னைப் போலப் படைத்தலின் வீரபத்திரதேவனை, 'முனிவன்' என்றார் 'அன்று தக்கன் வேள்வியைத் தவிர்ப்பான் வேண்டி இறைவன் தானாகப் படைத்துக் கொண்ட முனிவனைப் போலுங் கேவிந்தன்; வேற்கண் மகளிர் முலையுழக்குதலின் சிவக்கப் பட்டுக் கொடியணிதற்குக் காரணமான மார்பினையுடைய கோவிந்தன், என்றுரைப்பார் நச்சினார்க்கினியர்.

( 184 )
2286 போர்த்தநெய்த் தோர னாகிப்
  புலாற்பருந் தார்ப்பச் செல்வான்
சீர்த்தகை யவனைக் கண்டென்
  சினவுவே லின்னு மார்ந்தின்
றூர்த்துயி ருன்னை யுண்ணக்
  குறைவயி றாரு மென்றாங்
கார்த்தவாய் நிறைய வெய்தா
  னம்புபெய் தூணி யொத்தான்.

   (இ - ள்.) போர்த்த நெய்த்தோரன் ஆகி - மெய்யை மூடிய குருதியுடன்; புலால் பருந்து ஆர்ப்பச் செல்வான் - புலாலுக்