பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1293 

வெள் வேலை; வெகுண்டு மின்என விட்டான்-சினந்து மின்போல எறிந்தான்; சென்ற வேல் விருந்து . அங்ஙனம் சென்ற வேலாகிய விருந்தை; செங்கண் மறவன் நக்கு எதிர்கொண்டான் - செங்கண் மறவனான நந்தட்டன் சேவகன் மகிழ்வுடன் எதிர்கொண்டான்.

   (வி - ம்.) மன்றல; குறிப்பு வினைமுற்று. இது பெயரெச்சப் பொருள் தந்தது.

   அப்படை என்றது கட்டியங்காரன் படையை. படையுளான் ஒரு மகன், நீலக்குஞ்சி யொருமகன் எனக்கூட்டுக. மழகளிறு - இளங்களிறு, வீழான்-வீழ்த்தாதவன். செங்கண் மறவன் என்றது நந்தட்டன் மறவனை.

( 188 )
2290 மான்வயி றார்ந்து நோக்கும்
  வெருவுறு மருளி னோக்கிற்
றேன்வயி றார்ந்த கோதைத்
  தீஞ்சொலார் கண்கள் போலு
மூன்வயி றார்ந்த வெள்வே
  லொய்யெனப் பறித்து நக்கான்
கான்வயி றார்ந்து தேக்கிக்
  களிவண்டு கனைக்குந் தாரான்.

   (இ - ள்.) கான் வயிறு ஆர்ந்து தேக்கிக் களிவண்டு கனைக்கும் தாரான் - மணத்தை வயிறு நிறையத் தேக்கி மகிழும் வண்டு முரலுந் தாரையுடைய, நந்தட்டன் சேவகன்; மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறும் மருள் நோக்கின் - மான் வயிறு நிறைந்தபொழுது நோக்கும் அச்சமுற்ற மருண்ட பார்வையையும்; தேன் வயிறு ஆர்ந்த கோதை - வண்டுகள் தேனை வயிறு நிறையப் பருகும் மாலையையும் உடைய; தீ சொலார் - இனிய மொழிகளைப் பேசும் மகளிரின்; கண்கள் போலும் - கண்களைப்போன்ற; ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் - ஊனை வயிறு நிறையக்கொண்ட வெள்ளிய வேலை; ஒய் எனப் பறித்து நக்கான் - விரைந்து பறித்து நகைத்தான்.

   (வி - ம்.) வேல் பெற்றேம் என்று நகைத்தான் கண்கள் போலும் வேல், ஊன் வயிறு ஆர்ந்த வேல் என இயைக்க. மருளின், இன் : அசை.

( 189 )
2291 விட்டழல் சிந்தி வெள்வேல்
  விசும்பின்வீழ் மின்னி னொய்தாக்
கட்டழ னெடுங்கண் யாது
  மிமைத்திலன் மகளி ரோச்சு