பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1295 

   (வி - ம்.) கவிமதம் - புலவர் புனைந்துரை. புலவரானும் புனைந்துரைத்தற் கியலாத கண் என்றவாறு. வனப்பு - அழகு. செவிமதக் கேள்வி; கடன் அம்கேள்வி எனக் கூட்டுக. சவி - செவ்வி. சலநிதி : சீவகன் தோழருள் ஒருவன்.

( 191 )
2293 குஞ்சரங் குனிய நூறித்
  தடாயின குருதி வாடன்
னெஞ்சக நுழைந்த வேலைப்
  பறித்துவான் புண்ணு ணீட்டி
வெஞ்சம நோக்கி நின்று
  மிறைக்கொளி திருத்து வாற்கண்
டஞ்சிமற் றரசர் யானைக்
  குழாத்தொடு மிரிந்திட் டாரே.

   (இ - ள்.) குஞ்சரம் குனிய நூறித் தடாயின குருதி வாள் - (அவன்) யானைகள் வீழுமாறு வெட்டி வளைந்த குருதி படிந்த வாளை; தன் நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து - தன் மார்பிலே முன் நுழைத்திருந்த வேலைப் பறித்து; வான் புண்ணுள் நீட்டி - அப் புண்ணிலே செருகி; வெஞ்சமம் நோக்கி நின்று - யாம் பொர வரும் போர் இனி இல்லை யென்று கருதி நின்று; மிறைக்கொளி திருத்துவாற் கண்டு - அவ் வாளின் வளைவுக்கு இளக்கத்தைப் போக்குகின்றவனைக் கண்டு; அரசர் அஞ்சி யானைக் குழாத்தொடும் இரிந்திட்டார் - மன்னர்கள் நடுங்கிக் களிற்றுத் திரளொடும் ஓடினர்.

   (வி - ம்.) நுழைந்த வேல் - நுழைந்தும் உருவாத வேல். வேலைப் பறித்துக் கொண்டு, அவ் வேல் நுழைந்த சந்திலே வாளைச் செலுத்தி, வாளின் வளைவைப் போக்கினான். இப்போரே யாம் பொரத்தகும் பெரிய போரென்று கருதினான்.

( 192 )
2294 தோட்டுவண் டொலியன் மாலைத்
  துடியிடை மகளி ராய்ந்த
மோட்டுவெண் முத்த மின்னு
  முகிழ்முலை யுழுது சாந்தம்
கோட்டுமண் கொண்ட மார்பங்
  கோதைவாள் குளித்து மூழ்கிக்
கோட்டுமண் கொள்ள நின்றான்
  குருசின்மண் கொள்ள நின்றான்.

   (இ - ள்.) தோட்டு வண்டு ஒலியால் மாலைத் துடிஇடை மகளிர் ஆய்ந்த - தொகுதியான வண்டுகள் மொய்த்து ஒலிக்