மண்மகள் இலம்பகம் |
1296 |
|
|
கின்ற மாலையையும், துடிபோலும் இடையினையும் உடைய மகளிர் ஆராய்ந்த; மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை - பெருமை மிக்க வெள்ளிய முத்துக்கள் ஒளிரும் அரும்பனைய முலைகள்; உழுது சாந்தம் கோட்டு மண் கொண்ட மார்பம் - உழுது, சாந்தைத் தலையிலே அழகாகக் கொண்ட மார்பில்; கோதை வாள் குளித்து மூழ்கி - மாலையணிந்த வாள் நுழைந்து முழுகி; கோட்டு மண் கொள்ள - தன் நுனியிலே தசையைக் குத்தியெடுக்குமாறு; குருசில் மண் கொள்ள நின்றான் நின்றான் - சீவகன் மண் கொள்ளுமாறு நின்ற சலநிதி என்பவன் நின்றான்.
|
(வி - ம்.) போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த சலநிதி தன்னினைவின்றி வாளைப் பலகாலும் நுழைத்து ஊன் கொள்ள நின்றான். 'வெஞ்சமம் நோக்கி நின்று' என்பதனை இச் செய்யுளிற் கொணர்ந்து, அரசர் அஞ்சியோடுதலின் இனி நமக்குப் போரில்லையென்ற சலநிதி நினைத்தா னென்று கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
வாள் உருவாதிருத்தலின், தசையைக் குத்தி யெடுத்துக் குருதியிலே குளித்து நின்ற தென்க.
|
( 193 ) |
2295 |
எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித் | |
திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி | |
யருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றி | |
விரிமணி விளங்கு மான்றோ் விண்டொழ வேறி னானே. | |
|
(இ - ள்.) எரி மணிக் குப்பைபோல இருள் அற விளங்கும் மேனி - ஒளிரும் மணித்திரள் போல இருள் நீங்க இலங்கும் மெய்மையும்; திருமணிச் செம்பொன் மார்பின் - அழகிய மணிகளிழைத்த பொன் அணி விளங்கும் மார்பினையும் உடைய; சீவகன் சிலை கை ஏந்தி - சீவகன் கையிலே வில்லை ஏந்தி; அருமணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி - அரிய மணி அணிந்த வேந்தரின் உயிரைத் தன் தழற் கணையாலே கொள்ளை யிடுவதைத் தன் நெஞ்சிலே அமையச் செய்து; விண் தொழ - விண்ணவர் தொழ; விரிமணி விளங்கும் மான் தேர் ஏறினான் - ஒளி பரவும் மணிகளிழைத்து விளங்கும் புரவிபூட்டிய தேரிலே ஏறினான்.
|
(வி - ம்.) செம்பொன் : பொன்னாலான அணிகட்கு ஆகுபெயர். விண்ணவர் - ஈண்டு விஞ்சையர். விண் : இடவாகு பெயர்.
|
( 194 ) |
2296 |
கருவளி முழக்குங் காருங் | |
கனைகட லொலியுங் கூடி | |
யருவலிச் சிங்க வார்ப்பு | |
மாங்குடன் கூடிற் றென்னச் | |
|