பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1299 

உடைந்த மைந்தர் - போர்க்களத்தே நெஞ்சு உடைந்த மக்கள்; காடு எரி கவர; காட்டைத் தீப்பற்றியதனால்; கல்லென் கவரி மா இரிந்த வண்ணம் - கல்லென்னும் ஒலியுடன் கவரி மா ஓடினாற் போல; ஓடக் கண்டு - ஓடுவதைப் பார்த்து; உருவப் பைந்தார் அரிச்சந்தன் உரைக்கின்றான் - அழகிய பைந்தார் புனைந்த அரிச்சந்தன் கூறுகின்றான்.

   (வி - ம்.) அரிச்சந்தன் : கட்டியங்காரன் அமைச்சன், கண்ணாடியில் அழகும் அழகின்மையுந் தோன்றுமாறு போலப் போர்களத்திலும் ஆண்மையும் ஆண்மையின்மையுந் தோன்றுதலின், அதனை உவமித்தார், மிக்க வீரரன்மையின், கவரிமா உவமையாயிற்று.

( 198 )
2300 மஞ்சிவர் மின்ன னார்தம் வாலரிச் சிலம்பு சூழ்ந்து
பஞ்சிகொண் டெழுதப் பட்ட சீறடிப் பாய்த லுண்ட
குஞ்சியங் குமரர் தங்கண் மறம்பிறர் கவர்ந்து கொள்ள
வஞ்சியிட் டோடிப் போகி னாண்மையார் கண்ண தம்மா.

   (இ - ள்.) மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரிச் சிலம்பு சூழ்ந்து - முகிலிடை எழும் மின் போன்ற மங்கையரின் தூய பரல்களமைந்த சிலம்பினாற் சூழப்பட்டு; பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி - செம் பஞ்சினைக் கொண்டு எழுதப்பட்ட சிற்றடிகள்; பாய்தல் உண்ட குஞ்சி அம் குமரர் - பாய்தலைக் கொண்ட குஞ்சியை யுடைய மைந்தர்கள்; தம் மறம் பிறர் கவர்ந்து கொள்ள - தங்கள் வீரத்தை மற்றவர்கள் அகப்படுத்திக் கொள்ள; அஞ்சி இட்டு ஓடிப் போகின் - அச்சத்துடன் விட்டு ஓடுவாராயின்; ஆண்மை யார்கண்ணது - வீரம் யாவரிடத்தது

   (வி - ம்.) நீர் மகளிரிடத்தன்றிப் போரிலும் ஆடவராகவேண்டும் என்றான். குமரர்: முன்னிலைப் படர்க்கை, கேட்பிக்கும் இடத்தே வருகின்ற அம்ம என்னும் அசைச்சொல், 'உரைப்பொருட்கிளவி நீட்டமும் வரையார்' (தொல். உயிர் மயங். 10) என்றதனால், அம்மா என நீண்டு, அது, 'விளியொடு கொள்ப' (தொல்-விளிமரபு. 34) என்றதனால் அம்மா மைந்தீர் என நின்றது; முற்கூரிய மைந்தரை விளித்தானாம், 'அம்ம வாழி கேளிர்' (அகநா. 130) என்றாற் போல ஈண்டும் பன்மை யுணர்த்திற்று.

( 199 )
2301 உழையின முச்சிக் கோடு கலங்குத லுற்ற போதே
விழைவற விதிர்த்து வீசி விட்டெறிந் திடுவ தொப்பக்
கழலவ ருள்ள மஞ்சிக் கலங்குமே லதனை வல்லே
மழைமினி னீக்கி யிட்டு வன்கண்ண ராப வன்றே.

   (இ - ள்.) உழையினம் உச்சிக்கோடு கலங்குதல் உற்ற போதே - உழை மான்கள் தம் உச்சியிலுள்ள கொம்புகள் (கழலுங் காலத்து அதன்மேல் வேட்கையால்) மனம் கலங்குதல்