பதிகம் |
13 |
|
என்பது 'ஓர் தேவன்' என விகாரப்பட்டது ; இவன் சுதஞ்சணன். மழை : சுதஞ்சணன் ஊர்தி. ஆசிரியன் மொழியை உட்கொண்டு நடத்தலின் உரவோன் என்பது அறிவுடையோன் என்னும் பொருளது.
|
( 10 ) |
16 |
தேங்காத மள்ளர் திரடோளிணை சிக்க யாத்த |
| பூங்கச்சு நீக்கிப் பொறிமாண்கல நல்ல சோ்த்தி |
|
நீங்காத காதலு டையாய்நினைக் கென்று பின்னும் |
|
பாங்காய விஞ்சை பணித்தாங்கு விடுத்த வாறும், |
|
(இ - ள்.) பூங்கச்சு யாத்த தேங்காத திரள் தோளிணை மள்ளர் - பூவேலை செய்த கச்சினை உடையின்மேல் இறுகக் கட்டிய கெடாத, திரண்ட இரு தோள்களை உடைய வீரர் ; சிக்க- (சீவகனை) அகப்பட வளைக்க ; நீக்கி -(அச் சிறையை) நீக்கி ; பொறிமாண் நல்ல கலம் சேர்த்தி - வேலைப்பாடமைந்த சிறந்த அழகிய அணிகலன் பூட்டி; நீங்காத காதல் உடையாய்! பின்னும் நினைக்க என்று - இடையறாத அன்புடையாய்! இனியும் என்னை நினைத்திடுக என்று கூறி; பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த ஆறும் - தனக்குரிய மறைகளை அவனுக்கு நிலையாக்கி அங்கிருந்து விடுத்தபடியும்;
|
|
(வி - ம்.) பூங்கச்சு யாத்த கெடாத வீரர், தோளிணையையுடைய வீரர்; இவை இகழ்ச்சி (வீரர் அல்லாதவரை வீரர் என்றதனால் இகழ்ச்சி.) கச்சு - சேலையின்மேற் கட்டினது. சிக்க - அகப்படக்கோல; திசைச்சொல் (குடநாட்டுச் சொல்). நீக்கி - அச்சிறையை நீக்கி. 'பின்னும் நினைக்க' என்றது இடர்வரின் என்றதன்றி இன்பமுறுங்காலும் நினைக்க என்றவாறு.
|
|
இது முற்கூறிய கவியிற் சிறைப்பாவத்தைத் தொடர்புபடுத்து எடுத்து விரியக் கூறிப் பின்பு அவற்குச் செய்த சிறப்புக்களும் கூறிற்று. 1கட்டிலாமை பின்னே உணர்க.
|
( 11 ) |
<
17 |
பைந்நாகப் பள்ளி மணிவண்ணனிற் பாயல் கொண்டு |
| கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி |
|
மைந்நாக வேலி மலிபல்லவ தேய நண்ணிக் |
|
கொய்ந்நாகச் சோலைக் கொடியந்நகர் புக்க வாறும், |
(இ - ள்.) பை நாகப்பள்ளி மணிவண்ணனின் - படமுடைய அரவணையிலே நீல நிறமுடைய திருமால் துயிலுமாறு போல; கைநாகம் கமழ் காந்தள் பாயல்கொண்டு துஞ்சும் அம் சாரல் போகி - யானைகள் மணமிகு காந்தள் மலரைப் படுக்கை
|
|
|
1. தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங்கச்சு நீக்கி - கெடாத வீரர் (சீவகனுடைய) திரண்ட இரு தோள்களையும் அகப்படக் கட்டிய பூவேலை மிக்கதான கச்சினை நீக்கி. இவ்வாறு பொருள் கொள்ளலே சொற்கிடக்கைக்கு நேரியது.
|
|