| நாமகள் இலம்பகம் | 
130  | 
  | 
| 
    (வி - ம்.) பாட்டு ஆரோசையாலே மெல்ல மெல்ல உயர்ந்து செல்லுமாறுபோல என்க. இதனால் அமரோசைபோல மெல்ல இறக்கி என்பதும் கொள்க. 
 | 
( 209 ) | 
வேறு
 | 
  | 
|  239 | 
பண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி |  
|   | 
விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்ய |  
|   | 
புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகை |  
|   | 
கண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கண்டவர் மருளப் பாவை பண்தவழ் விரலின் பொறிவலம் திரிப்ப - பார்த்தவர் மயங்குமாறு விசயை யாழ் நரம்பில் தவழும் தன் விரல்களாற் பொறியை வலத்தே திரிப்ப; பொங்கி விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் - எழும்பி வானில் உலவும் முகிலைப் பிளந்து வானிலே பறக்கும்; புண்தவழ் வெய்ய வேற்கண் பாவை பொறிஇடம் திரிப்ப - பகைவர்க்குப் புண்ணுண்டாதற்குக் காரணமான வேலனைய கண்ணாள் பொறியை இடத்தே திரிப்ப; தோகை வீழ்ந்து கால் குவித்திருக்கும் - அம் மயில் வீழ்ந்து காலைக் குவித்திருக்கும். 
 | 
  | 
| 
    (வி - ம்.) கால் பரப்பிற் கெடும். 
 | 
  | 
| 
    பண் : யாழ் நரம்பிற்கு ஆகுபெயர். பாவை : விசயை. 
 | 
( 210 ) | 
வேறு
 | 
  | 
|  240 | 
காதி வேல்வல கட்டியங் காரனு |  
|   | 
நீதி யானிலங் கொண்டபி னீதிநூ |  
|   | 
லோதி னார்தமை வேறுகொண் டோதினான் |  
|   | 
கோது செய்குணக் கோதினுட் கோதனான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) காதி வேல்வல கட்டியங்காரனும் நீதியால் நிலம்கொண்ட பின் - பொருது வேலை எறிவதில் வல்ல கட்டியங்காரனும் முறையால் அரசன் கொடுப்பத் தான் நிலத்தை அடிப்படுத்திய பிறகு; நீதிநூல் ஓதினார்தமை வேறுகொண்டு - அறநூல் உணர்ந்தோரை யெல்லாம் தனக்கு வேறாகக்கொண்டு; கோதுசெய் குணக் கோதினுட் கோதனான் ஓதினான் - பயனின்றென நூல்களிற் கூறிய குணங்களிலேயும் பயனிலதாகிய செய்ந்நன்றி மறக்கும் குணத்தில் நிற்கின்ற பயனிலாதவன் ஒரு மொழி யுரைத்தான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) [கட்டியங்காரனும்] : உம்மை இழிவு சிறப்பு. கோது செய் குணக்கோது - நூல்கள் பயனின்றாகக் கூறிய குணங்களிற் கோது; அஃதாவது செய்ந்நன்றிக்கேடு; உட்கோதனான் - அதிலே நிற்கின்ற 
 | 
  |